"இனி பணத்துல சம்பளம் கொடுக்கமாட்டேன். இனிமே அதுதான் பெஸ்ட் வழி"..CEO போட்ட புது ஆர்டர்.. திகைத்துப்போன ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் இனி சம்பளம் அளிக்க இருப்பதாக உள்ளது. அதற்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ள விளக்கம் தான் பலரையும் வியப்படைய செய்துள்ளது.
நிதி நிறுவனம்
இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வருகிறது டாலிமணி (TallyMoney) என்னும் நிதிநிறுவனம். 20 பேர் பணிபுரியும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கேமரோன் பெர்ரி, சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் ஊதியம் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார் கேமரோன். மேலும், அவரும் தனக்கான ஊதியத்தை தங்கமாகவே பெற இருப்பதாகவும் முடிவுசெய்து உள்ளார். இது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை திகைக்க வைத்திருக்கிறது.
என்ன காரணம்?
நாட்டில் உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார் கேமரோன். இதன்மூலம் துவக்கத்தில் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு தங்கத்தில் ஊதியம் வழங்கப்படும் எனவும், பணமாக ஊதியம் வேண்டும் எனக் கேட்போருக்கு தங்கத்திற்கு பதிலாக பணமாகவே ஊதியமானது வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் கேமரோன்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுபோன்ற காலங்களில் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கும். இதனால் மக்கள் பொருட்களை வாங்கும் அளவு குறையும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உலகம் முழுவதும் நிலையானது. ஆகவே, ஊழியர்கள் தங்களுக்கு தேவையான போது, தங்கத்தை கொடுத்து அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பணவீக்கம் தங்கத்தினை பாதிக்கும் அளவு மிக சிறியது என்பதால் இந்த முடிவை எடுத்தேன்" என்றார்.
சரிவு
இங்கிலாந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணத்தின் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை வரலாம் எனவும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து எச்சரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்திருப்பது, அதிகரித்துவரும் பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு கேமரோன் தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் ஊதியம் வழங்க இருப்பதாக அறிவித்திருப்பது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தலைக்குள் தங்கம்.. என்ன ட்ரிக்ஸ்-ஆ யோசிக்கிறாங்க.. விக்கை வேட்டையாடிய கஸ்டம்ஸ் ஆபிசர்..!
- 'உங்க ஷூவை ஏன் அவர்கிட்ட கொடுத்தீங்க?".. ஏர்போட்ல திருதிருன்னு முழிச்ச நபர்.. கஸ்டம்ஸ் அதிகாரிகள் காட்டிய அதிரடி..!
- அடேங்கப்பா..! 400 வருசத்துக்கு அப்புறம் லண்டனுக்கு கொண்டுவரப்பட்ட 2 நீர்நாய்கள்.. இதுக்கு பின்னடி இப்படியொரு காரணம் இருக்கா..?
- வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ந்த ரூபாய் மதிப்பு.. உச்சத்தில் தங்கம் விலை..!
- சார் உங்க செருப்பை கொஞ்சம் கழட்டுங்க.. சென்னை விமான நிலையத்தில் ‘ஷாக்’ கொடுத்த பயணி..!
- அந்த ஏரியாவே அதிருற மாதிரி.. வீட்டுக்குள்ள இருந்து கேட்ட பெண்ணின் அலறல்.. கதவ உடைச்சு உள்ள நுழைஞ்சப்போ.. ஷாக் ஆன போலீசார்
- இந்த ஊழியர்களுக்கு எல்லாம் அடிக்கப்போகுது ‘செம’ ஜாக்பாட்.. 6 வருசத்துல இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம்? ஆய்வில் தகவல்..!
- ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆயிருக்கலாம்.. எனக்கு அப்படி ஒரு காசு தேவையில்ல.. நேர்மையாக உதறி தள்ளிய மனிதன்
- ரொம்ப லேட் பண்ணாம... ஓவர் மேக்கப், அதிக ஜூவல்ஸ் அணியக்கூடாது.. ஏர் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
- "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்".. ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.. CCTV-யில் சிக்குன மருமகள்