'லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது’... ‘இதையும் சேர்த்து கண்டிப்பா பண்ணனும்'... 'கொரோனாவை கட்டுப்படுத்த அறிவுரை சொன்ன'... WHO எமெர்ஜென்சி நிபுணர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஊரடங்கு எனப்படும் லாக் டவுன் அறிவிப்பதுடன் நிறுத்திக்கொள்வது மட்டுமே கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தீர்வு ஆகாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால நிபுணர் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் கெரோனா தொற்றுக்கு 15,000 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால நிபுணர் மைக் ரியான், பிபிசி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு வெறும் லாக் டவுன்களை அமல்படுத்துவது மட்டுமே தீர்வல்ல.

தொற்று நோய் ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதுதான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறோம். சரியான விழிப்புணர்வு விதிகளைப் பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும். பொது சுகாதார விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது. அப்படி பொது சுகாதார விதிகளை பின்பற்றாவிட்டால், மறுபடியும் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உண்டாகும்.

ஆசிய நாடுகளான சீனா, சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வீட்டிலிருந்தே வேலை செய்ய பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மதுபானக் கூடங்கள், பள்ளிகள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்பட்டன. சமூகத் தொடர்புகள் மக்களிடம் இல்லாதவாறு பார்த்துக்கொண்டன.

கொரோனா அறிகுறி இருந்தாலே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையே தான் அமெரிக்காவும், ஐரோப்ப நாடுகளும் பின்பற்ற வேண்டும். தற்போது வரை இத்தாலி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோசமான நாடாகும்’ என்று அவர் கூறியுள்ளார்.

HOSPITAL, CORONAVIRUS, COMBAT, ITALY, CHINA, DOCTORS, SINGAPORE, SOUTHKOREA, EUROPE, WHO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்