நமக்கு 'சோறுதான்' முக்கியம்... ஊரடங்கு நேரத்துலயும் மக்கள் 'கூகுள்ல'... விழுந்து,விழுந்து தேடுனது 'இந்த' உணவைத்தானாம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் மக்கள் அதிகம் தேடிய உணவுகள் மற்றும் இடங்கள், நாடுகள் குறித்த விவரங்களை கூகுள் நிறுவனம் வெளியிடும். அதேபோல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களும் வருடம் தோறும் மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை வெளியிடும். (இதில் பிரியாணி தான் கடந்த சில வருடங்களாக அனைவரின் தேர்வாகவும் இருந்து வருகிறது)
அதேபோல தற்போது ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகம் தேடிய உணவுகளின் விவரம் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனைவரும் போட்டிபோட்டு கூகுளில் பிரியாணியைத்தான் அதிகம் தேடி இருப்பார்கள் என்று நினைத்தால், அதுதான் இல்லை. மாறாக குவாரண்டைன் ஸ்நாக்ஸ் என்பதைத்தான் மக்கள் அதிகம் தேடி இருக்கின்றனர். இதில் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா மக்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
இந்த தேடலில் வாழைப்பழ பிரட்டை மைக்ரோவேவ் அவனில் வைத்து கேக் செய்வதுதான் அதிகம் பேரின் தேர்வாக இருந்துள்ளது. சாக்லேட் கேக்குகள், கேரட் கேக் மற்றும் பிரபலமான டல்கோனா காப்பி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அடுத்ததாக வீட்டிலேயே ஃபிரைட் ரைஸ் செய்வது எப்படி என்பதை தேடித் தேடி பலர் சமைத்துள்ளனர். இதுதவிர குடும்பத்துடன் சாப்பிடும் டின்னர் உணவுகள் என்ற தலைப்பிலும் அதிகம் பேர் தேடியுள்ளதாக கூகுள் தெரிவித்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையில் கொரோனா பரவல்’... ‘அதிகரிக்க காரணம் இதுதான்’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘இந்த 6 ஏரியாக்களில் தான் ஜாஸ்தி’!
- 'அவங்க நோயாளிகள் இல்ல... விருந்தாளிகள்!'.. பிரத்யேக வசதிகளோடு... கோவிட் நல வாழ்வு மையம்!.. அசத்தும் சுகாதாரத்துறை!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 184 நாடுகளில் 'நரக' வேதனை... 12 முறை 'எச்சரித்தும்' கேட்கவில்லை... வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...
- 'ரெண்டு வைரஸையும் அடிச்சு ஓட விட்ருக்காங்க...' 'மன தைரியத்தை பாராட்டி கைத்தட்டி ஆரவாரம் செய்த மருத்துவர்கள்...' 107 வயது பாட்டியின் கதை...!
- மேலும் '2 வாரங்களுக்கு' ஊரடங்கை நீட்டிக்கிறோம்... அதிரடி அறிவிப்பை 'வெளியிட்ட' மாநிலம்!
- தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று!.. சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!. முழு விவரம் உள்ளே!
- கொரோனாவ விட இதுதான் ரொம்ப 'கொடுமையா' இருக்கு... '700 பேர் உயிரிழப்பு'... 100 பேருக்கு 'பார்வை' பறிபோனது!
- ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் பலி!.. கொரோனா ஊரடங்கு காலத்தில்... அரசாங்கத்தை விரட்டும் அட்டூழியம்!.. அலறும் மெக்சிகோ!
- எங்க நாட்டுக்கு 'அதெல்லாம்' தேவையில்லை... கொரோனாவை 'வித்தியாசமாக' கையாளும் 'அரசு'... ஆய்வாளர்கள் 'எச்சரிக்கை'...
- 'சென்னையில் உணவு டெலிவரி பாய்க்கு கொரோனா'... 'எந்த வீட்டிற்கு எல்லாம் டெலிவரி'... கணக்கெடுப்பு தீவிரம்!