இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் ‘லாக்டவுன்’.. அதிரடியாக அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் லோக்கல் லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளதாக இங்கிலாந்து நாடு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இதுவரை சுமார் 3,11,739 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 43,598 பேர் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். அங்கு தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் லாக்டவுன் தளர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, இந்திய வம்சாளியை சேர்ந்த 763 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான், மேற்கிந்திய தீவிகள் நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், உள்ளூர் அளவில் மறுபடியும் லாக்டவுனை அமல்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதில் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்த அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல், ‘அந்த தகவல் சரியானதுதான். இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் லெய்செஸ்டர் போன்ற பகுதிகளில் முதலில் ஊரடங்கு அமல்படுத்த உள்ளோம். நாட்டின் எல்லா பகுதிகளிலும் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதை கடைசி நான்கு, ஐந்து வாரங்களில் கண்டறிந்தோம். இதனால் உள்ளூர் லாக்டவுன், சமூக இடைவெளி மற்றும் அதிக அளவிலான பரிசோதனை போன்றவற்றால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இது சரியான வழிமுறையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு... காப்பாத்திடலாம்னு நினைச்சப்ப தான்... அவர் மரண செய்தியோட சேர்த்து 'இந்த' அதிர்ச்சி தகவலும் வந்துச்சு!
- மதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை!.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 உயிர்களை ஒரே நாளில் கொலையுண்ட கொரோனா!.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- தனியார் பள்ளி 'கல்விக்கட்டணம்' குறைக்கப்படுமா?... நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'முக்கிய' முடிவு!
- ‘தடபுடலா நடந்த கல்யாணம்’.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி.. அதிரடி ‘ஆக்ஷனில்’ இறங்கிய அதிகாரிகள்..!
- VIDEO: ‘இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது’.. கொதித்த ‘ஜெகன்மோகன்’.. ஆந்திராவை அதிரவைத்த வீடியோ..!
- "இங்கயும் கொரோனா வந்துடுச்சு... 2 நாளைக்கு முதல்வர் ஆபீஸ் க்ளோஸ்.. யாரும் வராதீங்க!".. அதிரடியாக அறிவித்த முதல்வர்!
- “எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்!
- 'கொரோனாவை' எதிர்க்க உதவும் 'டி-செல்கள்' சிகிச்சை... 'புதிய வழிமுறைகள்' குறித்த 'ஆராய்ச்சி' முடிவுகள் 'வெளியீடு...'
- 'இங்கிலாந்துக்கு' பரவிய '50%' கொரோனா 'தொற்றுக்கு...' 'இந்த நாடு தான் காரணம்...' 'தி மெயில் ஆன் லைன்' செய்தி நிறுவனம் 'குற்றச்சாட்டு...'