'பொத்தி பொத்தி வச்சாலும் கசிந்த தகவல்'... 'சீன ஆய்வகத்தில் வௌவால்களுக்கு என்ன வேலை'?... பரபரப்பை கிளப்பியுள்ள வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் உயிருள்ள வௌவால்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

'பொத்தி பொத்தி வச்சாலும் கசிந்த தகவல்'... 'சீன ஆய்வகத்தில் வௌவால்களுக்கு என்ன வேலை'?... பரபரப்பை கிளப்பியுள்ள வீடியோ!

உலகையே நிலைகுலையச் செய்துள்ள கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து முதல் முறையாகப் பரவியது. இதற்குச் சீனா தான் காரணம் எனப் பல உலக நாடுகளும் குற்றம்சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து பல ஆய்வாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

Live bats in cages kept in Wuhan Institute of Virology

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் உயிருள்ள வௌவால்கள் வைக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சியாகிய Sky News Australia இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் உயிருள்ள வௌவால்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள காட்சிகளைக் காணமுடிகிறது.

Live bats in cages kept in Wuhan Institute of Virology

அந்த வீடியோ உண்மையாகவே வுஹான் ஆய்வகத்தில் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்ற பல நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்குக் கூடுதல் பலம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் உலக சுகாதார மையத்தின் சார்பில் வுஹான் ஆய்வகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு உயிருள்ள வௌவால்கள் இல்லை என்று வலியுறுத்திய Peter Daszak என்பவரின் கருத்துக்கள் முரண்படும்.

முன்னதாக கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காகச் சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் விசாரணை அதிகாரிகள் குழுவில் ஒருவரான Peter Daszak, கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து பரவியது என்ற கருத்தை நிராகரித்து, இனி மேற்கொண்டு இது தொடர்பாக ஆய்வு தேவையில்லை என்று அறிக்கை ஒன்றை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் அமெரிக்க உளவுத்துறை, கொரோனா வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதற்கு போதுமான அளவில் ஆதாரங்கள் உள்ளன என்று கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அது தொடர்பாக மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்