வித்தை காட்டிய ஐஸ் கிரீம் அங்கிள்.. அசால்ட்டா டீல் செஞ்ச குட்டிப்பையன்.. வைரலாகும் கியூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐஸ் கிரீம் விற்கும் நபரை குட்டிப்பையன் அதிரவைக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படுவைரலாக பரவி வருகிறது.
துருக்கி ஐஸ் கிரீம்
சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஐஸ்கிரீம் கடைகளில் தேர்ந்த விற்பனையாளர் ஒருவர் இருப்பார். நீண்ட கம்பியின் நுனியில் வைக்கப்பட்டிருக்கும் கோனில் ஐஸ்கிரீமை நிரப்பும் அவர் வாடிக்கையாளரிடம் கொடுப்பதற்கு முன்னர் அவரது பொறுமையை சோதித்துவிடுவார். கொடுப்பது போல நீட்டி பின்னர் கம்பியை வேறுபக்கம் இழுத்துக்கொள்ளும் இந்த வகை விற்பனையாளர்கள், பல வித்தைகளை வெளிக்காட்டிய பிறகு இறுதியில் வாடிக்கையாளரிடம் அந்த ஐஸ்கிரீமை நீட்டுவார்கள். இதுபோன்ற வீடியோக்கள் சமீப காலங்களில் சோசியல் மீடியாவில் அதிகளவில் வைரலாகி வந்தன. ஆனால், இப்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவில் ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறான் சிறுவன் ஒருவன்.
தீபான்ஷு காப்ரா
சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொடர்பு மற்றும் போக்குவரத்துத்துறை கமிஷனராக இருக்கிறார் திபான்ஷு காப்ரா. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் பொது மக்களுக்கான அறிவுரைகள், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பதிவுகள், வெடிச்சிரிப்பை வரவழைக்கும் காமெடி வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் துருக்கி ஐஸ்கிரீம் கடை வாசலில் ஒரு சிறுவன் நிற்கிறான். வழக்கம்போல கையில் கம்பியுடன் விற்பனையாளர் தனது வித்தைகளை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார். அப்போது சிறுவனிடம் எதேச்சையாக கம்பியை அந்த விற்பனையாளர் நீட்ட, லபக் என்று அந்த கம்பியை பிடித்துக் கொள்கிறான் அந்த சிறுவன். அவரிடமிருந்து கம்பியை வாங்க போராடியும் கிடைக்காத நிலையில், அதன் நுனியில் இருந்த ஐஸ்கிரீம் நிரப்பப்பட்ட கோனை லாவகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்கிறான் அந்த சிறுவன். ஐஸ்கிரீமை சுவைத்தபடி அங்கிருந்து நடந்து செல்லும் சிறுவனை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த வரலாறுகாணாத மழை.. வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்.. உறைந்துபோன உலக நாடுகள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்