"நானே செஞ்சேன்.. நல்லா இல்லைன்னா..".. கொரோனா பாதித்த அம்மாவுக்கு டிபன் பாக்ஸ் அனுப்பிய சிறுவன்.. கூடவே கலங்கடிக்கும் கடிதம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிறுவன் ஒருவன் நோய்வாய்ப்பட்ட தனது அம்மாவுக்கு சாப்பாடு செய்து, அதனுடன் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியிருக்கிறான். இந்நிலையில் இந்த கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தா கிளம்பிட்டாங்க.. ஊருக்கு திரும்பிய அடுத்த ஆஸ்திரேலிய வீரர்.. முழு விபரம்.!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் நோய்வாய்ப்பட்ட தனது அம்மாவுக்கு சிறுவன் எழுதிய கடிதம் தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக ஆர்வலரான எரின் ரீட் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அப்போது தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த சூழ்நிலையில் அவரது மகன் சிறிய டிபன் பாக்சில் உணவு தயாரித்து கொடுத்ததாகவும் அதனுடன் கடிதம் ஒன்றை வைத்திருந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட் குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், ஒரு சிறிய டிபன் பாக்சில் கீரைகள் மற்றும் நூடுல்ஸ் இருக்கின்றன. அடுத்ததாக தனது அம்மாவுக்கு ஒரு கடிதம் ஒன்றையும் அந்த சிறுவன் எழுதியிருக்கிறான். அதில்,"உங்களுக்காக இதை நானே தயாரித்தேன். நன்றாக இல்லை என்றால் சாரி" என எழுதியிருக்கிறார். அந்த சிறுவன். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

இதுவரையில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ட்வீட்டை லைக் செய்திருக்கின்றனர். மேலும், நெட்டிசன்கள் அந்த சிறுவனது பாசமான நடவடிக்கையை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Also Read | முடிவுக்கு வந்த காத்திருப்பு.. இனி இவரு தான் கேப்டன்.. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி அறிவிப்பு..!

LITTLE BOY, PREPARES, MEALS, MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்