வயிறு ரொம்ப 'கனமா' இருக்கு டாக்டர்...! 'கொத்துக் கொத்தாக வயித்துக்குள்ள இருந்து...' 'இத்தன வருஷ சர்வீஸ்ல இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்ல...' - மிரண்டுப்போன டாக்டர்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிறு ரொம்ப 'கனமா' இருக்கு டாக்டர்...! 'கொத்துக் கொத்தாக வயித்துக்குள்ள இருந்து...' 'இத்தன வருஷ சர்வீஸ்ல இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்ல...' - மிரண்டுப்போன டாக்டர்கள்...

லித்துவேனியா நாட்டில் இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை பரிசோதனை செய்த போது தான் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்துள்ளது.

Lithuania man kilo of nails nuts bolts knives in stomach

அந்த இளைஞரின் வயிற்று பகுதியில் கொத்து கொத்தாக இரும்பு பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் அந்த இளைஞரை கிளைபேடா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அந்த இளைஞரின் வயிற்றுப் பகுதியில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஆணி, நட்டு, போல்டுகள், கத்திகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அறுவை சிகிச்சை வல்லுநர் சருனாஸ் டைலிடெனாஸ், 'இந்த இளைஞர் ஒரு வித்யாசமான கேஸ். 3 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில், அவரது உடம்பில் சில 10 சென்டி மீட்டர் நீளமுள்ள உலக பொருட்கள் எல்லாம் உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிக குடிப்பழக்கம் உடைய தன்னுடைய குடிப்பழக்கத்தை விட்ட பிறகே இதுபோன்ற உலோகப் பொருள்கள் விழுங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்