'டாப் 100' வலைதளங்களின் பெயர்கள் 'வெளியீடு'... முதல் இடத்தை தலைவன் 'கூகுள்' பிடித்துள்ளார்.. அடுத்த 9 'வலைதளங்கள்' குறித்த 'தகவல்கள்' உள்ளே...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் எந்த வலைதளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த டாப் 100 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு சமீபத்திய அறிக்கை உலகம் முழுவதும் உள்ள மக்கள் எந்த எந்த வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணித்து டாப் 100 வலைதளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் 10 தளங்கள் 167.7 பில்லியன் மாதாந்திர வருகையாளர்களை கொண்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் கூகுள் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுள்தான் உலகிலேயே அதிகம் பார்வையிட்ட வலைதளமாக உள்ளது.

அடுத்ததாக இரண்டாம் இடத்தில் யூட்யூப் நிறுவனம் பிடித்துள்ளது. ஏராளமானோர் யூட்யூப் சேனல்கள் ஆரம்பித்து பல்வேறு வீடியோக்களை அப்லோட் செய்து வருவதல் பலர் இதற்கு ரசிகர்களாக மாறியுள்ளனர்.

3வது இடத்தை ஃபஸ்புக் பிடித்துள்ளது. தற்போயைத சூழ்நிலையில் ஃபேஸ்புக் பார்த்துதான் குழந்தைக்கு சோறு ஊட்டுகிறார்கள். அந்த அளவுக்கு அன்றாட மானுட வாழ்வில் நிரந்தர இடத்தை ஃபேஸ்புக் பிடித்துள்ளது.

4வதாக பைடு என்ற சீன  தேடுபொறி வலைதளம் பிடித்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இந்த வலைதளத்தை அனைத்து மக்களும் பயன்படுத்துவதால் இது 4-வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக 5வது இடத்தை விக்கிபீடியா நிறுவனம் பிடித்துள்ளது. உலகின் அனைத்துத் தகவல்களும் ஒரு இடத்தில் தொகுக்கப்பட்டு வருவதால் இது ஒரு அறிவுக்களஞ்சியமாகவே பார்க்கப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், அலுவலக பணியாளர்கள் என இதனை பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லலாம்.

6வது இடத்தில் உலகின் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமான அமேசான் பிடித்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் வலைதளம் அதிக பயனாளர்களால் பார்க்கப்படுகிறது. அமர்ந்த இடத்திலிருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வரவழைக்க முடிவதால் இந்த வலைதளம் ஒரு தவிர்க்க முடியாத தேவையாக உருவெடுத்துள்ளது. 

7வது இடத்தை ட்விட்டர் வலைதளம் பிடித்துள்ளது. நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை லட்சக்கணக்கானோர் பின்தொடர்வதால் இதற்கு என்றுமே மவுசு குறைவதில்லை.

8வது இடத்தை இன்ஸ்டாகிராம் பிடித்துள்ளது.பேஸ்புக்கிற்கு சொந்தமான புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராமை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆடை அலங்காரங்கள், காமெடிக்ஸ், மற்றும் பிரபலங்களின் அன்றாட வாழ்வில் எடுக்கப்படும் புகைப்படங்கள் ஒரே தளத்தில் கிடைப்பதால் இந்த வலைதளம் அதிகம் விரும்பப்படும் தளமாக மாறியுள்ளது. 

அடுத்ததாக 9வது இடத்தை யாஹூ பிடித்துள்ளது. இந்தியாவில் ஜிமெயில் தளத்தையே அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், யாஹூவை பயன்படுத்துபவர்கள் உலக அளவில் அதிகம் இருப்பதால் இந்த வலைதளம் 9வது இடத்தை பிடித்துள்ளது.

10வது இடத்தை, பிரபல அடல்ட் பார்ன் சைட்டான எக்ஸ் வீடியோஸ் பிடித்துள்ளது. உலக அளவில் அதிகம் பேர் பார்வையிடும் பார்ன்  வலைதளமாக உள்ளது.

TOP 100 LIST, GOOGLE, TWITTER, YAHOO, FACEBOOK, INSTAGRAM, YOUTUBE, WIKIPEDIA, AMAZON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்