விலங்குகளையும் அச்சுறுத்தும் கொரோனா!.. 4 புலிகள், 3 சிங்கங்களுக்கு தொற்று உறுதி!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு மனிதர்கள் மட்டுமல்லாது தற்போது விலங்குகளும் பாதிப்படைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் நியூயார்க் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. நியூயார்க்கில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நியூயார்க்கில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது அங்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, நியூயார்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மூலம் விலங்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரான்ஸ் வனஉயிரினப் பூங்காவில் சிங்கம், புலிக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஏம்பா... ஏதோ ட்ரம்ப் மாத்திரையாம்ல!?'.. மருந்துக்கடையை 'கார்னர்' செய்யும் மக்கள்!.. திக்குமுக்காடும் ஊழியர்கள்!.. என்ன நடந்தது?
- 'மலிவு விலை' கொரோனா 'பரிசோதனை'... 'ஒரு மணி' நேரத்தில் 'துல்லியமான முடிவு...' பரிசோதனைக்கு வைத்த 'பெயர் தான் ஹைலைட்டே...!'
- 'வர ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை'... 'கவலப்படாதீங்க தங்கம் வாங்க வழி இருக்கு'... நகைக்கடைகளின் அதிரடி ஐடியா!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'பலி எண்ணிகைய மட்டும் பாத்தா போதுமா!?'.. அசரவைத்த கொரோனா தரவுகள்!.. இந்திய மருத்துவ கவுன்சில் பரபரப்பு கருத்து!
- 'அழகை விட உயிரே முக்கியம்...' 'வேறு' வழியில்லாமல் 'ஜப்பான் அரசு...' செய்த 'திகைக்கச் செய்யும்' காரியம்...
- கடந்த 'ஜனவரியிலேயே' வாங்கி 'பதுக்கி விட்டது சீனா...' தேவையைவிட '18 மடங்கு' வாங்கிக் 'குவித்தது'... 'இப்போது சீனா வைப்பது தான் விலை...'
- ''இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை...'' ''உயிரிழப்புகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது...'' 'போற்றிய நாடே தூற்றிய அவலம்...'
- தமிழகத்தில் இந்த ‘ஒரு’ மாவட்டத்துல மட்டும்தான் இதுவரை யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை..!
- என்ன கொடுமை! மத்த நாடுகள்ல இருந்து 'கொரோனா' பரவுதாம்... 'அதிரடி'யில் இறங்கிய சீனா!