'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல'...'LinkedIn'ல் வந்த அறிவிப்பு'... 'அதிர்ந்து போன கூகுள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்லிங்டுஇன் வலைத்தளத்தில் வெளிவந்த அறிவிப்பு தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்டுஇன் வலைதளத்தில், வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள் அதிகமாக பகிரப்படும். பெரும் நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை பலரும் இந்த தளத்தை வேலைவாய்ப்பிற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த தளத்தை வேலைவாய்ப்பிற்காக அதிகமானோர் பயன்படுத்துவதால், பல போலியான நிறுவனங்கள் பொய்யான தகவலை வெளியிடுவதாக குற்றசாட்டு நிலவி வந்தது.
இந்நிலையில் அந்த குற்றச்சாட்டினை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. இவரது வேலைக்கான பணியிடம் காலியாக உள்ளது என லிங்டுஇன் வலைதளத்தில் அறிவிப்பு வெளிவந்தது. இதனை கண்ட பலரும் உடனே அந்த பதவிக்கு விண்ணப்பித்தார்கள். இந்த விவகாரம் பெரிதாகி பரபரப்பை கிளப்ப, அந்த அறிவிப்பு போலியானது என தெரியவந்தது. நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் போலியாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மிட்செல் ரிஜெண்டர்ஸ் என்ற அந்த நபர் லிங்டுஇன் வலைதளத்தில் பல பேர் போலியான தகவலை பதிவிடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த செயலை செய்துள்ளார். இதனிடையே இந்த பிரச்னை தொடர்பாக லிங்டுஇன் நிறுவனம் கூறுகையில், ''இதுப் போன்ற போலியான தகவல் எங்கள் கவனத்திற்கு வந்த உடன் அதை நாங்கள் நீக்கி விட்டோம். இது போன்ற மோசடியான பதிவுகள் எங்கள் சேவை விதிமுறைகளை மீறுவது'' என கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கிரிக்கெட்டின் கடவுளை சந்தித்த பின்'.. பிசிசிஐ-யின் ட்வீட் .. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!
- 'கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட சென்னை மாணவர்'... 'கூகுள் நிறுவனத்தில் அடித்தது ஜாக்பாட்'!
- ப்ளே ஸ்டோரில் இருந்து ஆயிரக்கணக்கான செயலிகள் நீக்கம்..! கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை..!
- 'ஃபைனல்ஸ்க்கு வர்ற டீம் எது?' .. 'அது பேஸ்பாலா? கிரிக்கெட்டா?'.. அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு!
- 'ஒன்னா ரெண்டா.. 20 வருஷம்டே' .. கொண்டாடும் கூகுளின் ஊழியர்.. இப்ப என்னவா இருக்கார் தெரியுமா?
- இனிமேல் கூகுள்லையும் உணவு ஆர்டர் செய்யலாம்..! புது ஆப்ஷனை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்!
- 'இந்த போன்களில் இனி கூகுள் ப்ளே ஸ்டோர், யூடியூப் இல்லை'... 'வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி'!
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- 'மாதம் 97 ரூபாதான் சம்பளம்?'.. ட்விட்டர் CEOவுக்கு இந்த நிலைமை ஏன்?
- ‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா!