தாலிபான்கள் 'நெஞ்சை' பிடிக்குற மாதிரி வந்துள்ள 'அதிர்ச்சி' செய்தி...! 'இன்னும் ஆட்டம் முடியல...' - 'அமெரிக்கா'வின் மாஸ்டர் பிளான்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கிய நிலையில், தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்கா தங்கள் படைகளுடன் காபூல் விமான நிலையத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது விமான நிலையத்தில் தற்கொலைப்படை மூலம் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.(கே) பயங்கரவாதிகளுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க துருப்புகள் மீண்டும் செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'தாலிபான்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது வேறொன்றாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், தாலிபான்களுக்கு எதிராக போராளிகள் கலகம் செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் மோதல் வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, மேற்கத்திய நலன்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும், எனவே அதற்கு முன்னர் அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தான் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது' என அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்