ஒரே மாதிரியான இரு மரணங்கள்! பிபின் ராவத் போலவே தைவான் ராணுவ தளபதியும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தான் இறந்தார்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் நேற்று குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் உயிர் இழந்தார். பிபின் ராவத் உடன் அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் அந்த விபத்தில் உயிரிழந்தனர். விமானி வருண் சிங் மட்டும் 80 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

Advertising
>
Advertising

தமிழகத்தின் கோயம்புத்தூர் - சூலூர் பகுதிகளுக்கு இடையில் உள்ள குன்னூரில் தான் இந்திய விமானப் படையின் ஐஏஎப் எம்ஐ-17வி5 ராணுவ ஹெலிகாப்ட்டர் நேற்று எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்ட்டரில் 14 பேர் இருந்துள்ளனர். அதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய தளபதி பிபின் ராவத் போலவே கடந்த தைவான் ராணுவத் தளபதியும் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் தான் மரணம் அடைந்தார். தைவான் தலைநகரில் தய்பேய்-ல் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஒன்று ஏற்பட்டது. மலைப்பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரை இறக்க முற்படும் போது வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் தைவான் ராணுவ தலைவர் ஷென்-யீ-மிங்க் உட்பட 12 பேர் இருந்தனர்.

ஒரு ராணுவ முகாமில் இருந்து மற்றொரு ராணுவ முகாம்-க்குச் செலும் போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்து மரணம் அடைந்தவர்களுள் தைவான் ராணுவத்தில் பல முக்கிய ராணுவ அதிகாரிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சீனா உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடு ஆக உருவானது. இந்த நாட்டுக்கு என தனி அரசாங்கம், ராணுவம் என இருந்தாலும் வரும் காலங்களில் தைவான் சீனா உடன் சேர்க்கப்படும் என்ற பேச்சு பரவலாக உள்ளது.

BIPIN RAWAT HELICOPTER ACCIDENT, HELICOPTER ACCIDENTS, TAIWAN ARMY CHIEF, INDIAN ARMY CHIEF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்