பூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகத்தில்... உயிர்கள் வாழும் சூழல்!.. மேகங்கள் சொல்லும் செய்தி!.. விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் ஏதேனும் இருக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகத்தில்... உயிர்கள் வாழும் சூழல்!.. மேகங்கள் சொல்லும் செய்தி!.. விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்!

சூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகத்தைப் பற்றிய ஆய்வில் Jane Greaves என்ற இங்கிலாந்து விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டபோது, வெள்ளி கிரகத்தின் அமில மேகங்களில் இருந்து பாஸ்பீன் (Phosphine) வாயுவின் தடயத்தை கண்டுபிடித்தனர்.

நிறமற்றதும், எளிதில் தீப்பிடிக்கக் கூடியதும், துர்நாற்றம் அடிக்கக் கூடிய இந்த வாயு, ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் 3 மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் உருவாகும் வாயுவாகும்.

எனவே, வெள்ளி கிரகத்தில் இந்த வாயு இருப்பதன் மூலம் ஹைட்ரஜன் இருப்பதும் உறுதியாகி உள்ளது. மனிதர்கள் உயிர் வாழ ஹைட்ரஜன் வாயுவும் தேவை என்பதால், உறுதியாக வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்