ஒரு காதல் கடிதத்தில் எத்தனை ஆச்சர்யம்.. கார்டூனிஸ்ட் கலைஞர் மனைவிக்கு எழுதிய கடிதம்.. இதுவும் கடந்து போகும்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க கார்டூனிஸ்ட் கலைஞர் ஆல்பிரட் ஜோசஃப் ப்ருஹ் அவரது மனைவி குய்லிடே ஃபேன்குய்லேவுக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடிதம் எழுதுவதென்பது தனிக்கலை. கடிதம் என்பது சிறகு முளைத்த பந்து; இறகு முளைத்த இதயம். கடிதம் எழுதுகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்தாளரான மிடுக்கு வரும். நலம் நலமறிய ஆவல் என்ற ஒரு வாக்கியம் அன்பால் வாசிக்கும் போது நோயெல்லாம் பறந்து போகும். வெளிநாட்டில் தனிமையில் இருக்கும் கணவனுக்கு மனைவி எழுதும் கடிதங்கள் பொக்கிஷம். அப்பாவிடம் இருந்து வந்தால் பற்று, விருப்பமானவரிடம் இருந்து வந்தால் கிளுகிளுப்பு, நண்பனிடம் இருந்து வந்தால் எதிர்பார்ப்பு, அதிகாரியிடம் இருந்து வந்தால் பதற்றம் என்று உறையைப் பார்த்ததும் உடம்பு முழுவதும் உணர்ச்சி கொந்தளிக்கும்.
காதல் கடிதம்
தவறிப் போன காதல் கடிதத்தால் தலைகுனிந்த காதலர்கள் நிறைய பேர் உள்ளனர். கடிதத்தில் தான் எத்தனை வசதிகள். உச்சி முகரலாம். நெஞ்சோடு அணைக்கலாம் இதழ் பதிக்கலாம், வர்ணனை ரசிக்கலாம், கையெழுத்தைப் பார்த்து மனம் குளிரலாம், எழுதியவரின் வாசனை முகரலாம். கோபம் படும்போது கையோடு கடிதத்தை கசக்கலாம். எத்தனை மனிதர்களை உணர்வுபூர்வமாக கட்டிப்போட்ட சொல் இது. மனிதனின் இறப்புடன் சேர்ந்த, அவரது காதல் சுவடுகளும் மறைந்து விடுகின்றன. ஆனால், நூற்றாண்டுகளை கடந்தும் நிலை நிற்கும் காவியக் காதல் குறித்த செய்திதான் இது.
காலத்தால் அழியாத காதல் கடிதம்
இந்தக் கடிதம் கடந்த 1913ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்க கார்டூனிஸ்ட் கலைஞர் ஆல்பிரட் ஜோசஃப் ப்ருஹ் சார்பில் அவரது மனைவி குய்லிடே ஃபேன்குய்லேவுக்கு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். பொதுவாக காதல் கடிதம் என்றாலே கற்பனைக்கு எட்டிய வரையிலும் ரசனையுடன் கூடிய வசனங்கள் அதிகம் இருக்கும். ஆனால், அதை எல்லாம் தாண்டி கலைநயத்துடன் இந்த கடிதத்தை அந்த கார்டூனிஸ்ட் வடிவமைத்துள்ளார். கடிதத்தின் ஒரு பக்கம் முழுவதும் காதல் வார்த்தைகளும், அன்பை வெளிக்காட்டும் வாசகங்களும் நிரம்பியிருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் அழகான ஓவியங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஒரு கடிதத்தில் இத்தனை ஆச்சர்யம்
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என கேள்வி எழலாம். வியப்பைத் தரும் ஒரு விஷயம் இருக்கிறது. கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி அதை நீங்கள் ஒவ்வொரு மடிப்பாக, மடித்தால் இறுதியாக ஓர் அழகிய ஓவியங்களை கொண்ட வீடு போன்ற தோற்றம் உங்களுக்கு கிடைக்கும். அதன் நுழைவு வாயிலில் 'உள்ளே நுழைவதற்கான வழி இதுதான்' என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை சமூகவலைதளத்தில் சர்டோனியஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காதல் கடிதம் டிரெண்டிங் ஆகி வருகிறது.
ட்ரெண்ட் ஆகும் கடிதம்
காதல் கடிதங்கள் மட்டும் தான் என்றல்ல, குடும்ப உறவுகளுக்குள் அன்பை வெளிப்படுத்தும் கடிதங்கள் கூட, வரலாற்றுச் சுவடுகளாக அழியாமல் உள்ளன. அமெரிக்கா - வியட்நாம் இடையே போர் நடந்தபோது, வியட்நாமைச் சேர்ந்த தனது சகோதரர் 52 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய கடிதம் கடந்த 2020 ஆம் ஆண்டில் கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார் பெண் ஒருவர். மே 10, 2020 தேதியிட்டு டெலிவரி செய்யப்பட்ட அந்தக் கடிதம் 1968 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது ஆகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரஷ்யா - உக்ரைன் போர் பதட்டம்: வானில் 'ரிலாக்ஸ்' என்ற வடிவில் சென்ற விமானம்.. வெளிவந்த உண்மை!
- "மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ஸ்மார்ட் சிட்டி என்றழைக்க முடியுமா?" மநீம தலைவர் கமல்ஹாசன் ஆவேசம்
- பொல்லார்ட் சார் எங்க இருக்கீங்க.. இங்க உங்க பிரண்ட் டுவைன் பிராவோ செஞ்ச சேட்டைய பாருங்க! பறந்த மெசேஜூம் பதிலும்!
- சூப்பராக மாறும்.. சென்னை மெட்ரோ மேம்பாலங்கள்.. சபாஷ் !
- சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் பெரும் இழப்பு.. இறுதி மூச்சுவரை போராடினீர்கள்.. சின்ன தல உருக்கம்!
- என் மனைவிக்கு 'பாய் பிரண்ட்' தேவை.. வீடியோக்கள் போட்டு.. பெங்களூரு கணவன் செய்த 'WIFE SWAP'
- எதுவா இருந்தாலும் அங்க வந்து பேசிக்கங்க.. ஏரியா தாண்டி வந்த கோழி கைது! மாட்டிகிட்டியே பங்கு..
- பார்லிமென்ட்டில் தமிழ்நாடு பற்றிய பேச்சுக்கு முதல்வர் நெகிழ்ச்சி .. பதிலுக்கு ராகுல் காந்தி போட்ட வைரல் ட்வீட்
- வாங்கம்மா வாங்க... நடமாடும் பத்து ரூபாய் மளிகை கடை... இளைஞரின் அசத்தலான ஐடியா!
- எரிச்சலா இருக்கு.. ட்விட்டர் வெளியிட்ட NFT ப்ரொஃபைல் பிக்சர்.. ஓப்பனா ட்வீட் செய்த எலான் மஸ்க்