ரூ.76 கோடி கொடுத்த ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ! உக்ரைனுடன் இப்படி ஒரு பந்தம் இருக்கா? நெகிழவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா உக்ரைன் மீது போர்த்தொடுத்துள்ள நிலையில் அந்த நாட்டுக்கு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக அளித்ஹுள்ளார்.

Advertising
>
Advertising

ICC Rankings: ஒரே மேட்சில் உச்சத்துக்கு சென்ற ஜட்டு… ஐசிசியின் புதிய தரவரிசை

ரஷ்யா உக்ரைன் போர்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 15-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைன் நாட்டின் பிரியுத்னோய், ஜாவித்னே-பஜான்னே, ஸ்டாரொம்லைனோவ்கா, ஒக்தியாபிரஸ்கோய் மற்றும் நோவோமெய்ஸ்கோய் ஆகிய பகுதிகளை ரஷ்யா தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில், இதுவரை 2203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா ஆதரவு நாடுகள்

ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போருக்கு பல ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனாலும் ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடர்ந்து வருகிறது. ஈரான், பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளன.

போர் நிலவரம்

நாட்கள் செல்ல செல்ல, போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனின் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்ற வேண்டி, ரஷ்யா வேகமாக ஊடுருவி வருகிறது. உக்ரைன் எங்கும் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், அவர்களின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதுபோல இதுவரை 7000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் பல முக்கியமான இடங்கள் ரஷ்ய ராணுவத்தால் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் போர் முடிந்தாலும் மீண்டும் உக்ரைன் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம்.

டிகாப்ரியோவின் நிதியுதவி

உக்ரைனுக்கு பல பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் இப்போது ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான லியானார்டோ டிகாப்ரியோ 10 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுளன. இந்த தகவலை உக்ரைனின் அண்டை நாடான போலிஷ் நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. டிகாப்ரியோ ஒரு இயற்கை ஆர்வலராக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இயற்கையை மனிதர்கள் இன்னும் நேசிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் உடனான உறவு

டி காப்ரியோவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இரத்த பந்தம் ஒன்றும் உள்ளது. லியோவின் பாட்டி ஹெலெனா உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா என்ற பகுதியில் பிறந்தவர். அவர் இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தார். அதன் பின்னர் அவரின் குடும்பம் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தது. தனது தாய் மற்றும் பாட்டியால் வளர்க்கப்பட்டவர்தான் டிகாப்ரியோ. டி காப்ரியோ போலவே உக்ரைனில் பிறந்த நடிகர்களான மிலா குனிஸ் மற்றும் அஷ்டன் குட்சர் ஆகியோர் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

1400 கிமீ தூரம்.. தனியாவே நடந்து போன உக்ரைன் சிறுவன்.. பையில் இருந்த லெட்டரை பாத்துட்டு கலங்கிப்போன அதிகாரிகள்..!

LEONARDO DECAPRIO, MILLION DOLLAR, UKRAINE, RUSSIA UKRAINE, HOLLYWOOD, ACTOR, ரஷ்யா உக்ரைன், டிகாப்ரியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்