உலக புகழ்பெற்ற 'சேனலின்' குளோபல் CEO ஆன இந்திய வம்சாவளி பெண்...! 'உலக அளவில் டிரெண்டிங்...' - யார் இந்த லீனா நாயர் ...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் இன்டர்நேஷனல் சேனலின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற சம்பவம் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த லீனா நாயர் என்ற பெண்மணி தற்போது பிரபல பிரெஞ்சு நிறுவனமான சேனல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பேஷன் சேனல் குழுமம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெம்ஷத்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்த லீனா நாயர் 1992 ஆம் ஆண்டில் ஆங்கிலோ-டச்சு எஃப்எம்சிஜி நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

சுமார் 30 ஆண்டுகளாக யுனிலீவர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த லீனா, படிப்படியாக உயர்ந்து 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக உயரிய பொறுப்புக்குச் சென்றார்.

தற்போது உலகின் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் நிறுவனமான பேஷன் சேனலின் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து கூறிய லீனா 'பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் சேனலின் உலகளாவிய தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதில் பணிவும் பெருமையும் அடைகிறேன்' என தெரிவித்துள்ளார்.

அதோடு, 'யுனிலீவர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோப் லீனாவிற்கு வாழ்த்து செய்தியை கூறியுள்ளார். அதில்,'கடந்த 30 ஆண்டுகளாக லீனா எங்கள் நிறுவனத்தில் சிறந்த பங்களித்தற்காக நன்றி கூற விரும்புகிறேன்.

லீனா யுனிலீவரில் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் ஒரு முன்னோடியாக இருந்துள்ளார். அதோடு, எங்கள் தலைமைத்துவ வளர்ச்சியின் மாற்றம் மற்றும் எதிர்கால வேலைக்கான எங்கள் தயார்நிலை ஆகியவற்றில் ஒரு உந்து சக்தியாக இருந்தார். அவருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளார்.

LEENA NAIR, CEO, FASHION CHANNEL, லீனா நாயர், பிரெஞ்சு பேஷன் ஹவுஸ், தலைமை நிர்வாகி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்