மருத்துவமனை எங்கும் 'உடல்கள்',.. கடும் 'இழப்பு'க்கு மத்தியில்... கையில் மூன்று 'பச்சிளம்' குழந்தைகளுடன் தவிக்கும் 'செவிலியர்'... மனதை நொறுங்க செய்யும் 'புகைப்படம்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த வெடி விபத்து உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தின் மூலம் இதுவரை சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விபத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து நிகழ்ந்த பகுதி அருகே ஜார்ஜ் மருத்துவமனை ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றிய நான்கு செவிலியர்கள் உயிரிழந்தனர். அதே போல பல நோயாளிகளும் காயமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர், தனது கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. வெடி விபத்து நடந்த போது, மருத்துவமனையில் இருந்த ஏராளமான குழந்தைகளை அந்த செவிலியர் காப்பாற்றியுள்ளார். அப்போது மூன்று குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டே அவர் யாருடனோ பதற்றத்துடன் செல்போனில் பேசும் போது இந்த புகைப்படத்தை பிலால் மெரி ஜெவிஸ் என்ற புகைப்பட கலைஞர் படம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து அந்த புகைப்பட கலைஞர், 'எனது 16 வருட பணி அனுபவத்தில் இப்படி ஒரு கொடூரத்தை பார்த்ததில்லை. அந்த மருத்துவமனையில், சுற்றி காயமடைந்த நபர்களும், அதிகம் பேர் இறந்தும் கிடந்த நிலையில், மூன்று பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு இந்த செவிலியர் யாருக்கோ பதற்றத்துடன் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்' என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்