'குழந்தை பயப்படுறான்'...'ஒரே செகண்டில் தலை கீழாக மாறிய போராட்டக்காரர்கள்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காரில் இருந்த குழந்தைக்காக போராட்டக்காரர்கள் செய்த செயல் பலரையும் நெகிழ செய்துள்ளது. அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

லெபனான் நாட்டில் அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ள புதிய பொருளாதார கொள்கைக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். சிறிய அளவில் ஆரம்பித்த இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி பெரும் மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. இதனால் அங்கு பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தனது முடிவை திரும்ப பெறும் வரை போராட்டம் ஓயாது என்ற குரல்கள் பல்வேறு இடங்களில் ஒலித்து வருகிறது.

இதனிடையே சில இடங்களில் இந்தப் போராட்டம் வன்முறையாகவும் வெடித்துள்ளது. இதனால் சில இடங்களில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நிலைமை இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்க லெபனான் போராட்டக்கார்களின் செயல் பலரையும் நெகிழ செய்துள்ளது.  '

'எலியனே ஜாபுவார் என்ற பெண் தனது 15 மாதக் குழந்தையை காரில் அழைத்துச் செல்கிறார். அப்போது சாலையில் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக போராடி கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்ற எலியனே ``காரில் என் குழந்தை இருக்கிறது. அதிக சத்தம் வேண்டாம். குழந்தை பயப்படுகிறது” என கேட்டுக்கொள்கிறார்.

அடுத்த கணமே அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் இணைந்து குழந்தைக்குப் பிடித்தமான பேபி ஷார்க் பாடலை பாடத் தொடங்குகின்றனர். ஒரே குரலில் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தபடி அவர்கள் பாடிய பாடல் பலரையும் நெகிழ செய்துள்ளது. இதுகுறித்து மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசிய எலியனே, ராபின் வளர்ந்த பின்னர் இந்த வீடியோவை நிச்சயம் பார்ப்பான். அப்போது லெபனானின் போராட்டக்காரர்கள் அவனுக்காவும் போராடினார்கள் என்பது குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைவான் என கூறினார்.

BABY SHARK, LEBANESE, PROTESTER, ELIANE JABBOUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்