'ஆளுக்கு 2 சூட்கேஸ தூக்கிட்டு... தெறித்து ஓடும் 3 வெளிநாட்டவர்கள்'!.. 'கண்டிப்பா நீங்க நினைக்கிறது அதுல இல்ல'!.. பகீர் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லெபனானிலிருந்து வந்து கனடாவில் வாழும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவர் ஆறு சூட்கேஸ்களூடன் தங்கள் சொந்த நாட்டுக்கு புறப்படுகிறார்கள்.

அப்போது, வழியில் போலிசாரிடம் சிக்கிக்கொள்வோமா, அல்லது லெபனான் எல்லை அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்வோமா என அஞ்சும் அந்த மூவரும் தங்கள் சூட்கேஸ்களில் அப்படி எதைக் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Charbel Elia, Patrick Rmeily மற்றும் Julnar Doueik என்னும் அந்த லெபனான் நாட்டவர்கள் மூன்று பேர், லெபனானுக்கு புறப்படுகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் அந்த சூட்கேஸ்களில் இருப்பது ஒன்றும் சட்ட விரோத பொருட்கள் இல்லை.

அவை அனைத்தும் மருந்துப் பொருட்கள். பல பாக்கெட் ஆஸ்பிரின், இபுரூபன், மாஸ்குகள், பால் பவுடர், டயாப்பர்கள், நாப்கின்கள் மற்றும் அவை குறித்த ஆவணங்கள் என ஒரு கட்டத்தில் தங்கள் அறையையே பார்மஸி போல மாற்றி வைத்திருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான், Eliaவுக்கு லெபனானிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவரது தோழி, பிள்ளைகளுக்கு பால் கூட வாங்க வழியில்லை என்று கூறி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். மேலும், மாதம் வெறும் 20 டாலர்கள் ஊதியத்தில் காலம் தள்ளும் அந்த பெண்ணின் ஒரு குழந்தைக்கு ஒரு வயது, மற்றொரு குழந்தைக்கு இரண்டு வயது.

 

அதைக் கேட்டதும், நான் அந்த பெண்ணுக்கு பால் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று Elia முடிவெடுத்துள்ளார். ஏனெனில், ஒரு ஆண்டுக்கும் மேலாக லெபனான் கடுமையான நிதிப் பிரச்சினையில் உள்ளது. விலைவாசியால் தவிக்கும் அந்த மக்கள், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்கள், அறிமுகமானவர்களிடம் அடிப்படைப் பொருட்களை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படிதான், வான்கூவரில் வாழும் இந்த மூவரும் இந்த ஆறு சூட்கேஸ்களுடன் லெபனானுக்கு புறப்படுகிறார்கள். ஆனால், கனடா விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்கள் மீது சந்தேகப்படுவார்களோ, லெபனானுக்குச் சென்றால் எல்லை அதிகாரிகள் மருந்துகளை பறிமுதல் செய்வார்களோ என அஞ்சுகிறார்கள் Charbel Elia, Patrick Rmeily மற்றும் Julnar Doueik. எனினும், முயற்சி செய்து பார்க்கலாம் என அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்