"நான் பேசுறது கேக்குதா??..." ஆன்லைன் 'மீட்டிங்'கில்... திடீரென தோன்றிய 'பூனை' முகம்... என்னங்க இது?... வைரலாகும் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஊரடங்கின் காரணமாக, மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்துள்ளனர்.

இத்தகைய காலகட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால் மூலமாகவே நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெறும் சந்திப்புகளில் நிகழும் தவறுகள் அல்லது ஏதேனும் வாடிக்கையான காரியங்கள், நெட்டிசன்கள் கண்களில் பட்டு வைரலாக தவறியதுமில்லை.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. அமெரிக்க வழக்கறிஞரான ரோட் போண்டோன் (Rod Ponton) என்பவர், ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், தனது உதவியாளரின் கணினி மூலம் பங்கு கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென பூனையின் ஃபில்டர் (cat filter) ON ஆகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதனை அணைக்க வழக்கறிஞர் முயன்ற நிலையில், அவரால் முடியவில்லை. அப்போது அந்த அழைப்பில் இருந்த நீதிபதி, 'நீங்கள் பேசுவது கேட்கிறது. ஆனால், ஏதோ ஃபில்டர் இயக்கத்தில் உள்ளது என நினைக்கிறேன்' என கூறியுள்ளார். பதிலுக்கு பேசிய வழக்கறிஞர், 'இதனை எப்படி மாற்றுவது என எனக்குத் தெரியவில்லை. எனது உதவியாளர் இதனை மாற்ற முயற்சி செய்கிறார். நான் பூனையில்லை' என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி பிறகு பேசிய ரோட், 'எனது உதவியாளரின் தவறுதலால் அப்படி நிகழ்ந்தது. அவர் தனது கணினியில் பூனை ஃபில்டரை ON செய்து வைத்திருந்தார். நான் அதன்பிறகு அதனை மாற்றி என் முகத்தை சரி செய்து கொண்டேன்' என கூறியுள்ளார். வழக்கறிஞரின் வாடிக்கையான இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்