'குடிக்க பணம் கொடு, இளம்பெண் செஞ்ச டார்ச்சர்'... 'கடுப்பாகி வீட்டிலிருந்து துரத்திய ஆண் நண்பரின் தாய்'... காத்திருந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் மாணவி அஸ்ரா. இவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் திடீரென தீ பிடித்தது. இதனால் காரை நிறுத்திய அவர், உடனடியாக காரில் இருந்து இறங்கி உதவி கேட்கச் சாலை தடுப்பைத் தாண்டி மறுபக்கம் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவர் தாண்டியது சாலை நடுவில் இருக்கும் தடுப்பு அல்ல, சாலையின் ஓரத்தில் இருக்கும் தடுப்புச் சுவர்.

'குடிக்க பணம் கொடு, இளம்பெண் செஞ்ச டார்ச்சர்'... 'கடுப்பாகி வீட்டிலிருந்து துரத்திய ஆண் நண்பரின் தாய்'... காத்திருந்த பயங்கரம்!

இதைக் கவனிக்காமல் அஸ்ரா தாண்ட எதிர்பாராதவிதமாகப் பாலத்தின் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த சமயம்  இந்த தகவல்கள் மட்டுமே வெளியானது. ஆனால் தற்போது முழு விசாரணை முடிந்த நிலையில், விபத்து நடப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களும் தற்போது வெளியாகியுள்ளது. சட்டக்கல்லூரி மாணவியான அஸ்ரா தனியாக காரில் செல்லவில்லை. அவரது ஆண் நண்பரான ஒமர் ஆலனும் அவருடன் பயணித்துள்ளார். மேலும் அஸ்ரா அதிகமான குடி போதையிலிருந்துள்ளார்.

Law graduate screamed for so long in 30ft bridge fall after car

காரில் இருவரும் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென எனக்குக் குடிக்க வேண்டும் பணம் கொடு என ஒமர் ஆலனுடன், அஸ்ரா சண்டை போட்டுள்ளார். ஒருவழியாக அவரை சமாளித்து ஒமர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த இருவரும் அவர்களது அறையில் கூச்சல் போட்டு அட்டகாசம் செய்ய, பக்கத்து அறையிலிருந்த ஒமரின் தாய் கோபமடைந்து இருவரையும் வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார். இதையடுத்து லண்டனில் அஸ்ரா தங்கியிருக்கும் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளார்கள்.

சாலையில் இருவரும் சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர்களை மறித்த காவல்துறை அதிகாரி ஒருவர், நீங்கள் குடித்து இருக்கிறீர்களா எனச் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது காரை வேகமாக எடுத்த அஸ்ரா, 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார். அதன் பின்னர் தான் கார் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த குழப்பத்திற்குப் பின்னர் தான் காரை விட்டு இறங்கிய அஸ்ரா, சாலை எங்கு இருக்கிறது, தடுப்புச் சுவர் எது, பாலம் எது எனத் தெரியாமல், இருட்டில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் விசாரணையில் தெரிவித்த அஸ்ராவின் ஆண் நண்பர் ஒமர், அஸ்ரா கீழே விழுந்ததும் அவரை காப்பாற்றத் தான் முயன்றதாகக் கூறியுள்ளார். இதனால் தனக்கும் காயம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அளவுக்கு மிஞ்சிய போதையால் தனது உயிரை இழந்து கொண்டு நிற்கிறார் இளம் சட்டக் கல்லூரி மாணவி அஸ்ரா.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்