உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு.. 20 நிமிஷ போராட்டத்துக்கு அப்பறம் பத்திரமாக மீட்ட வீரர்கள்.. வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு ஒன்று மிகப்பெரிய பெண் மலைப்பாம்பை பிடித்திருக்கின்றனர். இதுவரை பிடிக்கப்பட்டதிலேயே இந்த மலைப்பாம்பு தான் மிகப்பெரியது எனத் தெரிவித்திருக்கிறார்கள் உயிரியலாளர்கள்.

Advertising
>
Advertising

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் இந்த பாம்பு வசித்து வருவதை சுற்றுச்சூழல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து இந்த வனப் பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர் பாம்பு தேடும் வேட்டையில் இறங்கினர். அப்போது, தண்ணீர் பரப்பில் இருந்த பாம்பை வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். இருப்பினும், 20 நிமிட போராட்டத்திற்கு பிறகே வீரர்களால் பாம்பை பிடிக்க முடிந்திருக்கிறது. இதனையடுத்து பாம்பை பத்திரமாக ஆய்வு கூடத்துக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள்.

18 அடி நீளம்

தென்மேற்கு புளோரிடா மாகாணத்தின் வன பாதுகாப்பு குழுவினர் இந்த பாம்பினை ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட தகவலின்படி இந்த பாம்பு 18 அடி நீளமும் 98 கிலோ எடையும் கொண்டிருக்கிறது. புளோரிடா வனப்பகுதியில் இந்த பாம்பு ஆதிக்கம் செலுத்தி வந்ததாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். தொடர்ந்து நிபுணர்கள் மேற்கொண்ட  பரிசோதனையில் பாம்பின் வயிற்றில் 122 முட்டைகள் இருப்பது தெரிய வந்ததிருக்கிறது. இதன் மூலம், இனப்பெருக்க காலத்தில் அதிக முட்டைகளை உற்பத்தி செய்த பெண் மலைப்பாம்பு என்ற சாதனையை இந்த பாம்பு படைத்திருக்கிறது. மேலும், பாம்பின் வயிற்றுக்குள் மான்களின் கால் பகுதிகள் இருப்பதால், கடைசியாக இந்த பாம்பு மானை உட்கொண்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

புதிய திட்டம்

வனவிலங்கு உயிரியலாளர்கள் புளோரிடாவில் மலைப்பாம்புகள் அதிக அளவில் பெருகுவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றனர். ஆண் மலை பாம்புகளில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தும் இவர்கள், இதன்மூலம் அதிக அளவு முட்டையிடும் பெண் பாம்புகளை கண்டறிந்து அவற்றை தடுக்கிறார்கள். இதுபற்றி பேசிய வனவிலங்கு உயிரியலாளரும் சுற்றுச்சூழல் அறிவியல் திட்ட மேலாளருமான இயான் பார்டோஸ்செக்," பெண் மலைப் பாம்புகளை கண்டறிவது மிகவும் சவாலான பணி. ஆகவே நாங்கள் ஆண் பாம்புகளை டிராக் செய்கிறோம். இதன்மூலம் எளிதில் பெண் பாம்புகளை கண்டுபிடித்துவிடலாம்" என்றார்.

இந்நிலையில், தென்மேற்கு புளோரிடா மாகாணத்தின் வன பாதுகாப்பு அலுவலகம் இந்த மலைப்பாம்பின் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

PYTHON, SNAKE, USA, மலைப்பாம்பு, அமெரிக்கா, காடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்