'மாஸ்டர் பிளான்' சீனாவுடன் கைகோர்த்து... இந்தியாவுக்கு 'சிக்கலை' ஏற்படுத்த... களத்தில் 'இறங்கிய' மேலும் 2 நாடுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்த மேலும் 2 நாடுகள் களமிறங்கி இருக்கின்றன.
இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் எல்லைப்பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் சீனா சமீபகாலமாக இந்திய எல்லைகளை சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் ராணுவத்தை வைத்து முறையற்ற தாக்குதல்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக லடாக் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் இந்தியா சாலை அமைப்பதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சாலைகள் அமைப்பதை இந்தியா நிறுத்தி வைக்கவில்லை.
மேலும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் விபின் ராவத், ஆகியோர் இதில் பங்கேற்றனர். சீனாவின் நடவடிக்கை தொடர்பாக தளபதிகள் விளக்கம் அளித்தனர். எல்லைப் பகுதியில் தற்போதுள்ள நிலையை தொடர இந்திய படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் கைகோர்த்து எல்லை விவகாரத்தில் அந்த நாடுகளை சீனா தூண்டி விடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரே நேரத்தில் காஷ்மீர், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசத்தில் சீனாவும், காஷ்மீரில் பாகிஸ்தானும், உத்தரகாண்ட் எல்லையில் நேபாளமும் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. இது சீனாவின் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
அண்மையில் நேபாளம் இந்திய பகுதிகளை தன்னுடைய நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தற்போது எல்லைப்பிரச்சினையில் சீனா முழுமூச்சாக களமிறங்கி இருப்பதால் வரும் நாட்களில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க திட்டங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அவசர, அவசரமாக 'ராணுவத்தை' தயார்படுத்தும் சீனா... பதிலடி கொடுக்க 'டோக்லாம் குழு'வை கையில் எடுத்த இந்தியா!
- கற்கள், கம்புகள், 'முள் கம்பி'களைக் கொண்டு... 'இந்திய' வீரர்களை தாக்கிய சீனா?... எல்லைப்பகுதியில் 'குவிக்கப்பட்ட' 5000 வீரர்கள்!
- ‘சிவப்பு சாயம்’.. கால் வளையத்தில் ‘மர்ம எண்கள்’.. பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறா?.. பீதியில் மக்கள்..!
- உயிரோட தான் 'பாக்க' முடில... அவங்க 'உடலைக்கூட' கண்டுபுடிக்க முடிலயே... 'நொறுங்கிப்போன' மகன்!
- VIDEO: ‘97 பேரை பலி வாங்கிய கோரவிபத்து’!.. தரையிறங்கும் முன் தடுமாறிய விமானம்.. நெஞ்சை பதறவைத்த இறுதி நிமிடங்கள்..!
- “லேண்டிங் கியர் வேலை செய்யல!”.. வந்த வேகத்தில், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானிகள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலி!!
- சீனா, இத்தாலியை விட 'இந்திய' வைரஸ் ஆபத்தானது... நேபாள பிரதமரின் 'சர்ச்சை' பேச்சு!
- 'கொரோனா' ஒன்றும் 'பெருந்தொற்று' இல்லை... சொன்னது 'உச்சநீதிமன்ற' நீதிபதி... 'நம்ம நாடு இல்லை...'
- 'கொரோனா நெருக்கடி'... 'பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி இருக்கு'... பிரபல நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
- லாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே!