மனிதர்கள் வாழ முடியாத நாடாக மாறும் குவைத்? அதிர்ச்சி அளித்த ஆய்வாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மத்திய கிழக்கு நாடான குவைத் இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடாக மாறும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குவைத்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத் செல்வம் செழிக்கும் பிரதேசம். கச்சா எண்ணெய் உற்பத்தி இங்கே பிரதான வருமான மூலமாக இருக்கிறது. இருப்பினும் இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்கள் வசிக்க முடியாத நாடாக குவைத் மாறலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
என்ன காரணம்?
பணக்கார நாடாக கருதப்படும் குவைத்தில் அதிகரித்துவரும் வெப்பநிலை தான் மிக மோசமான பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் வெப்பநிலை 127.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி வருகிறது. ஆம். குவைத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது சமீபத்திய வரலாற்றில் எட்டப்பட்ட மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையாகும்.
சவூதி அரேபியாவிற்கும் ஈராக்கிற்கும் நடுவே அமைந்து உள்ள சிறிய நாடான குவைத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 20 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாடு 0.03 டன் மட்டுமே வெளியேற்றி இருப்பதாக குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அதிகபட்ச வெப்பம்
குவைத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 54 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடந்த 76 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இது கருதப்பட்டது. இருப்பினும் 2071 ஆம் ஆண்டு குவைத்தின் தற்போதைய வெப்பநிலை 4.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என எச்சரித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
குவைத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் வெப்பத்தால் வளைகுடா கடல் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. இதன் காரணமாக மீன்கள் இடம்பெயர்வதால் குவைத்தில் உள்ள மீனவர்கள் நெருக்கடியில் உள்ளனர்.
சிக்கல்
குவைத்தில் ஒரு குடும்பத்தில் செலவழிக்கப்படும் மின்சாரத்தில் 60 சதவீதம் குளிர்சாதன பெட்டிகளுக்கு மட்டுமே உபயோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 45 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த தேசத்தில் வேலைவாய்ப்பிற்காக பிற நாடுகளில் இருந்து வந்த மக்கள் இந்த வெப்பநிலை மாற்றத்தால் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் 2035க்குள் 7.4% வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவோம் என குவைத் தெரிவித்திருந்தது. வெப்பநிலையை குறைக்க குவைத் முயற்சிகள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக எச்சரித்திருக்கின்றனர் பருவ நிலை ஆராய்ச்சி நிபுணர்கள்.
அப்பாடா... கூகுள் Map ல வரவிருக்கும் புது ஆப்ஷன்.. இனி டிராவல் இன்னும் ஈஸியா இருக்கும்..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆற்றில் தத்தளித்த 9 பேர்.. தனி ஒருவனாக போராடி அனைவரையும் காப்பாற்றிய நபர்.. "குல சாமிப்பா நீ" .. நெகிழும் கிராம மக்கள்..!
- இனி ரஷ்யாவை நம்ப முடியாது.. இங்கிலாந்து அதிபர் எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!
- கேட்டரிங் வேலைன்னு சொல்லி.. குவைத்தில் தமிழ்ப்பெண்ணுக்கு நேர்ந்த உறையவைக்கும் சம்பவம்.. முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை
- "பணம் சம்பாதிக்கணுமா?".. யூடியூப் மூலம் வசீகர பேச்சு.. முந்தியடித்து வந்து ஷாக் ஆன மக்கள்.. மலைக்க வைக்கும் மாஸ்டர் பிளான்!
- சூப்பராக மாறும்.. சென்னை மெட்ரோ மேம்பாலங்கள்.. சபாஷ் !
- தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில்.. வெளிவந்துள்ள அல்டிமேட் தகவல்
- ஒரு வைரக்கல்லினால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த 30 வருட பகை.. எப்படி எல்லாத்தையும் மறந்து ஃப்ரண்ட்ஷிப் ஆயிட்டாங்க?
- குவைத் நாட்டில் ஏராளமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- நடுரோட்டில் 'குவிந்து' கிடந்த பணம்...! 'யாரும் கிட்ட போகாம தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த மக்கள்...' - என்ன நடந்தது...?
- 'நெஞ்சுல ரணம், கண்ணுல கண்ணீரோட...' வெளியான 'ஆப்கான் சாட்டிலைட்' புகைப்படம்...! - எதிரிக்கு கூட 'இப்படி' ஒரு நிலைமை வரக் கூடாது...!