பற்றி ‘எரியும்’ வீட்டிலிருந்து... குழந்தைகளைக் ‘காப்பாற்றிய’ தாய்க்கு ‘சிறை’... தண்டனைக்கான ‘அதிர்ச்சி’ காரணம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரியாவில் பற்றி எரியும் வீட்டிலிருந்து தலைவர்கள் புகைப்படத்தை காப்பாற்றாமல் குழந்தைகளைக் காப்பாற்றிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி செய்துவரும் வட கொரியா நாட்டில், அந்நாட்டின் மறைந்த தலைவர்களான இரண்டாம் கிம் சங், கிம் ஜோங் இல் போன்றவர்களின் புகைப்படங்களை மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்பது சட்டமாகும். அதைக் கண்காணிப்பதற்கென காவலர்களும் உள்ளனர். மேலும் அவர்களின் புகைப்படத்திற்கு ஏதேனும் நேர்ந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில் வட ஹேம்ஹாங் மாகாணத்தில் உள்ள ஒன்சாங் கவுண்டி எனும் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி இரண்டு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ந்துள்ளன. அப்போது குழந்தைகள் மட்டுமே வீடுகளுக்குள் தனியாக விளையாடிக்கொண்டிருந்த நிலையில், தகவலறிந்து விரைந்து சென்ற குடும்பத்தினர் குழந்தைகளை பத்திரமாகக் காப்பாற்றியுள்ளனர். ஆனால் வீடுகள் இரண்டும் எரிந்து போயுள்ளன. அதில் ஒரு வீட்டோடு சேர்ந்து அந்நாட்டுத் தலைவர்களின் புகைப்படங்களும் எரிந்து போயுள்ளன.

இதையடுத்து இந்த விஷயம் அந்நாட்டு அரசுக்குத் தெரியவர, புகைப்படத்தை எரியவிட்ட குற்றத்திற்காக அந்த வீட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான சிறை தண்டனையோடு, அங்கு கடினமான வேலையும் தரப்படும் எனக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தாய் கைதாகியுள்ளதால் காயமடைந்த குழந்தைகள் உதவிக்குக்கூட ஆளில்லாமல் தனியாகத் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முன்னதாக, அமெரிக்க மாணவர் ஒருவர் வடகொரியா சென்றிருந்தபோது தவறுதலாக இரண்டாம் கிம் சங் பெயர் அச்சிட்டிருந்த போஸ்டரைத் தள்ளிவிட்டதற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

FIREACCIDENT, KOREA, MOTHER, CHILDREN, PHOTO, KIMJONGUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்