மொத்த பழங்குடிக்கும் ராஜா.. ஆனாலும் இப்படி ஒரு நிலைமை.."எல்லாம் என் மக்களுக்காக தான்".. கலங்கவைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க நாடான கானாவின் பழங்குடியினத்திற்கு ராஜாவாக இருக்கும் எரிக் மானு என்பவர் வறுமை காரணமாக தோட்டவேலை செய்துவருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "மனித உடலுக்குத் தேவையான முக்கிய பொருட்கள் அங்க இருக்கு".. ஆராய்ச்சியாளர்களை திகைக்க வச்ச சிறுகோள்.. வரலாற்றிலேயே முதல் முறையாம்..!

ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் எரிக். இவரது குடும்பமே இந்த பழங்குடியினருக்கு ராஜவம்சமாக இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் எரிக்கின் உறவினர் தாட், மரணமடையவே, அவர்களது வழக்கப்படி எரிக்கிற்கு ராஜாவாக முடிசூட்டப்பட்டுள்ளது. கனடாவில் தோட்டவேலை செய்துவந்த எரிக், இதனால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.

மிகப்பெரிய அனுபவம்

கனடாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் எரிக், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கே வசித்துவந்த போதுதான், அவருக்கு பதவி அளிக்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய எரிக்,"இது மிகப்பெரிய அனுபவம். சொல்லப்போனால் மிகப்பெரிய பொறுப்பு. எங்களுடைய இனத்தில் உள்ள 6000 பேருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்" என்றார்.

பொறுப்பு

கனடாவின் சூசன் வாட்சன் என்பவரது அறக்கட்டளையில் தனது பணியினை துவங்கிய எரிக், அதன்பிறகு தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு இது பிடித்திருப்பதாக கூறும் அவர்,"எங்களது இன மக்கள் பெரும்பாலும் வறுமையிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கான சுகாதார வசதிகள், கல்வி நிலையங்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். ஆகவே என்னுடைய வேலைக்கு மீண்டும் சென்றுவிட்டேன். இத்தனை பெரிய கடமைகளை நிறைவேற்ற எங்களுக்கு பணம் தேவை. நான் வேலைபார்க்கும் இடத்தில் மக்கள், என்னை டிவியில் பார்த்ததாகவும் ராஜாவாக இருந்துகொண்டு ஏன் இந்த வேலையை செய்கிறீர்கள்? எனவும் கேட்பார்கள். நான் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்று சொன்னபடி எனது வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவேன்" என்றார்.

எரிக், தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தோட்டத்தில் பணியாளராக இருக்கிறார். தனது வருமானம் மூலமாக தனது மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற அவரது எண்ணம் தன்னை மிகவும் ஈர்த்துவிட்டதாக கூறுகிறார் வாட்சன். மொத்த பழங்குடியினத்துக்கும் ராஜாவாக இருந்தாலும் தனது மக்களுக்காக தோட்டவேலை செய்துவரும் எரிக்கை அந்த மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

Also Read | "நான் இன்னும் இளமையா தான் இருக்கேன்".. சிங்கிளா பசிபிக் பெருங்கடலை கடந்த தாத்தா.. இந்த வயசுல இப்படி ஒரு சாதனையா?

KING OF WEST AFRICAN, TRIBE, GARDENING JOB, CANADA, பழங்குடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்