தினசரி 500 பேருக்கு இலவச சாப்பாடு.. குருத்வாராவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிச்ச இங்கிலாந்து மன்னர்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் புதிதாக கட்டப்பட்ட குருத்வாரா ஒன்றை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். இந்த வீடியோவை அரச குடும்பத்தினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தினசரி 500 பேருக்கு இலவச சாப்பாடு.. குருத்வாராவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிச்ச இங்கிலாந்து மன்னர்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | 'வரலாறு முக்கியம்' படத்துல லேடி கெட்டப்பில் நடிகர் ஜீவா ..? வைரல் ஃபோட்டோ..! Varalaru Mukkiyam

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இதனையடுத்து அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக மணிமகுடம் சூடினார்.

King Charles visits gurudwara sits on floor with Sikh devotees

இந்நிலையில், கிழக்கு இங்கிலாந்து பகுதியில் உள்ள பெட்ஃபோர்ட்ஷையரின் லூடனில் புதிய சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாரா ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இதனை இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். அப்போது, தலையில் கைக்குட்டையை அணிந்தபடி சக பக்தர்கள் போல உள்ளே வந்த மன்னர் சார்லஸ், வழிபாட்டு கூடத்தில் கீழே அமர்ந்து மக்களுடன் உரையாடினார்.

குருத்வாராவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சமயலறையையும் அவர் ஆர்வத்துடன் பார்வையிட்டார். இங்கே ஒருநாளைக்கு 500 பேருக்கு இலவசமாக உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த சேவை வருடத்தின் அனைத்து நாட்களிலும் இருக்கும்  என குருத்வாரா தெரிவித்துள்ளது. குருத்வாராவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் குர்ச் ரந்தாவா, அரசரை வரவேற்றார். குர்ச், உள்ளூர் சீக்கிய சபையின் உறுப்பினரும் பெட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தின் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் மன்னர் சார்லஸ் குருத்வராவை பார்வையிடும் வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில்,"புதிதாகக் கட்டப்பட்ட குருநானக் குருத்வாராவில் தன்னார்வலர்களை மன்னர் சந்தித்தார். இங்கே வாரத்தில் 7 நாட்களும், வருடத்தில் 365 நாட்களும்  உணவுகளை தன்னார்வலர்கள் வழங்குகின்றனர். கொரோனா காலங்களில் குருத்வராக்கள் தடுப்பூசி மையங்களாக செயல்பட்டன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோ பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

 

Also Read | எப்புட்றா மொமெண்ட்... தொடையில் கேட்ச் பிடித்த ஷிகர் தவான்.. மிரண்டுபோன வாஷிங்டன் சுந்தர்.. வைரல் வீடியோ..!

KING CHARLES, GURUDWARA, KING CHARLES VISITS GURUDWARA, SIKH DEVOTEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்