இறுதி கணத்தில் அம்மாவின் சவப்பெட்டி மீது அரசர் சார்லஸ் வைத்த கடிதம்.. அதுல இருந்ததை படிச்சிட்டு கண்கலங்கிய பொதுமக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றன. இதில் உலக தலைவர்கள் கலந்துகொண்டு ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தின் போது ராணியின் மகனும் இங்கிலாந்தின் அரசருமான சார்லஸ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை சவப்பெட்டி மீது வைத்தார். இது பலரையும் கண்கலங்க செய்தது.

Advertising
>
Advertising

இரண்டாம் எலிசபெத்

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், நேற்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடிதம்

இங்கிலாந்து அரசர் சார்லஸ் தனது அம்மாவும் நாட்டின் ராணியுமாக இருந்த இரண்டாம் எலிசபெத்திற்கு கைப்பட சுருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அதனை சவப்பெட்டி மீது வைத்தார். பின்னர் அந்த கடிதத்துடனேயே ராணியின் சவப்பெட்டி புதைக்கப்படவேண்டும் என அவர் விருப்பப்படவே அவ்வாறே செய்யப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் "அன்புடனும், அர்பணிப்பு நினைவுடனும், சார்லஸ் R" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவர் இரண்டாம் பிலிப்-ன் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அரசர் சார்லஸ் தனது தாயின் சவப்பெட்டியில் வைத்த கடிதத்தின் புகைப்படங்கள் பலராலும் சமூக வலை தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

QUEEN ELIZABETH, KING CHARLES, LETTER, இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், கடிதம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்