அரசர் சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்ட புகழ்வாய்ந்த Red Box.. அப்படி என்ன இருக்கும் அதுக்குள்ளே..? அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் அரசர் பொறுப்பை மூன்றாம் சார்லஸ் ஏற்றதை தொடர்ந்து அவரிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரெட் பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை அரச குடும்பம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ரெட் பாக்ஸ்
இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மறைந்ததை முன்னிட்டு, அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ், அரச பொறுப்பை ஏற்றிருக்கிறார். பக்கிங்காம் அரண்மனையில் உள்ள அலுவலக அறையில் அவர் இருக்கும் புகைப்படத்தை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. அவருக்கு அருகே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரெட் பாக்ஸ்-ம் இருக்கிறது. முன்னதாக இரண்டாம் எலிசபெத் இதே பெட்டியுடன் இருக்கும் பல புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில், முதன்முறையாக பொறுப்பை ஏற்றுக்கொண்ட சார்லஸ் அந்த ரெட் பாக்ஸ்-ஐ வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்ளே என்ன இருக்கும்?
பிரிட்டன் ஆட்சியாளரிடம் இருக்கும் இந்த சிவப்புப் பெட்டியில் UK மற்றும் ராஜ்யங்களில் உள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் காமன்வெல்த் மற்றும் பல பிரதிநிதிகளின் ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், அரச குடும்பம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. .
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சேத்துவச்ச காசை எல்லாம் போட்டு ஏற்பாடு செய்த திருமணம்.. முந்துன நாள் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை.. கடைசிநேரத்துல பொண்ணு செஞ்ச விஷயம் தாங்க..!
- இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான ரகசிய தீவில் இருக்கும் சொகுசு வீடு.. கடலுக்கு நடுவுல இவ்வளவு வசதிகளா.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!
- உலகத்தின் Secret- ஆன பதுங்கு குழி.. பார்த்து பார்த்து கட்டிருக்காங்க.. எல்லாமே பக்கா பிளான்.. மிரள வைக்கும் பின்னணி..!
- "என்ன நடந்துச்சுன்னு இந்நேரம் வரை மர்மமாவே இருக்கு".. அடுத்தடுத்து சரிந்த 20 பேர்.. உடனே மூடப்பட்ட தீம்பார்க்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
- "உங்களுக்கு 8 கோடி ரூபாய் ஜாக்பாட் அடிச்சிருக்கு'.. தம்பதிக்கு வந்த மெயில்.. ஏமாத்துறாங்கன்னு நெனச்சவங்களுக்கு காத்திருந்த ஷாக்..!
- "சுத்தி 128 பிளாட்'ல இவரு தான் ஒரே ஆளு.." தனியாக வாழும் முதியவர்.. "இப்போ பேய் நகரம் மாதிரி இருக்காம்.."
- "இது எப்படி இங்க வந்துச்சு".. அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்.. கலர்ஃபுல்லா இருக்கே..!
- "7 வருஷத்துக்கு ஒருதடவை.. அதுவும் ஒரே நாள் தான் அந்த தீவை பார்க்க முடியும்".. அட்லாண்டிக் கடலில் இருக்கும் அமானுஷ்ய தீவு..!
- தீராத பல்வலி... கொஞ்சம் கூட யோசிக்காம பெண் எடுத்த முடிவு.. இருந்தாலும் இது ஓவருங்க.. திகைத்துப்போன நெட்டிசன்கள்..!
- "ஆத்தாடி, மொத்தமா ரூ.1593 கோடிக்கும் மேல.." பரிசு வென்ற நபரை தேடும் நிறுவனம்.. "பின்னாடி இவ்ளோ சுவாரஸ்யம் இருக்கா??"