மகுடம் சூடும் மன்னர் சார்லஸ்.. தயாராகும் 700 ஆண்டு பழமையான அரியணை.. மிரள வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் அரசராக மூன்றாம் சார்லஸ் இந்த மாதம் மகுடம் சூட இருக்கிறார். இதனை தொடர்ந்து, மொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என் மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன்".. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.. EVKS இளங்கோவன் உருக்கம்.!

ராணியின் மறைவு

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இதனையடுத்து அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

முடிசூட்டு விழா

சம்பிரதாயப்படி ராணியின் மறைவுக்கு பிறகு மூன்றாம் சார்லஸ் மன்னர் பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் வரும் 6 ஆம் தேதி இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் மணிமகுடம் தரிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் இங்கிலாந்து முழுவதும் பிரம்மண்ட முறையில் நடைபெற்று வருகின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் முடிசூட்டு விழாவின்போது சார்லஸ் அமரும் அரியாசனம் குறித்து சமூக வலை தளங்களில் பலரும் பேசி வருகின்றனர். 700 ஆண்டு கால பழமையான இந்த நாற்காலி காலம் காலமாக இங்கிலாந்தின் அரச பரம்பரையை சேர்ந்தவர்கள் குறிப்பாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

பொக்கிஷ அரியாசனம்

முடிசூட்டு நாற்காலி என்று அழைக்கப்படும் இந்த பண்டைய அரியாசனம், ஹென்றி VIII, சார்லஸ் I, ராணி விக்டோரியா மற்றும் மறைந்த ராணி எலிசபெத் II உட்பட பல நூற்றாண்டுகளாக இங்கிலாந்து ஆட்சியாளர்களின் முடிசூட்டு விழாக்களின் மையமாக இருந்து வருகிறது. இதனை உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷ பொருள்களில் ஒன்று என வெஸ்ட்மின்ஸ்டர் அபே அரண்மனை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல, வெஸ்ட்மின்ஸ்டர் அபே அரண்மனை வெளியிட்டுள்ள தகவலின்படி இங்கிலாந்தை ஆண்ட 39 ஆட்சியாளர்களின் முடிசூட்டு விழாக்களில் இந்த அரியாசனம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கட்டுள்ளது. இங்கிலாந்தின் முதலாம் எட்வர்ட் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த 6.5 அடி உயரமுள்ள நாற்காலியில் தங்க தகடுகள், பறவைகளின் உருவங்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன. ஓக் மரத்தில் மன்னரின் ஆஸ்தான கலைஞரால் இந்த அரியாசனம் செய்யப்பட்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

பல ஆண்டுகாலம் பழமையானது என்பதால் இதனை புதுப்பிக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனிடையே இந்த அரியசானத்தை மீண்டும் காணும் ஆர்வம் பலருக்கு மத்தியிலும் உருவாகி உள்ளது.

Also Read | "எலான் மஸ்க்காய நமஹ".. பூஜை போட்ட ஆண்கள் சங்கம்.. அவங்க சொன்ன காரணம் இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

KING CHARLES III, KING CHARLES III CORONATION, CHAIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்