இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான ரகசிய தீவில் இருக்கும் சொகுசு வீடு.. கடலுக்கு நடுவுல இவ்வளவு வசதிகளா.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசுக்கு சொந்தமான தீவில் இருக்கும் சொகுசு வீடு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தற்போது இங்கே தங்க பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
சுற்றுலா
சுற்றுலா செல்வதை விரும்பாத ஆட்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றி கடல், நடுவே குட்டி தீவில் வாசிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? அதுவும் அரசருக்காக கட்டப்பட்ட சொகுசு வீட்டில் தங்குவது என்றால்? ஆமாம் உண்மையாகவே அப்படியான ஒரு இடம் பிரிட்டனில் இருக்கிறது. மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ். தற்போதைய இங்கிலாந்து அரசரான இவருக்கு மிகவும் பிடித்த இடம் இதுதானாம். வானை விஞ்சும் மாளிகைகள் பல அரசரின் வசம் இருந்தாலும் தன்னந்தனி தீவில் இருக்கும் இந்த சிறிய வீடு சார்லசுக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது.
வீடு
தன்னுடைய முன்னாள் மனைவி மறைந்த இளவரசி டயானாவுடன் சார்லஸ் இங்கே தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பல சந்தர்ப்பங்களில் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டமரிஸ்க் ஹவுஸ், கார்ன்வால் கடற்கரையிலிருந்து 28 மைல் தொலைவில் உள்ள ட்ரெஸ்கோ தீவில் அமைந்திருக்கிறது. இந்த வீடு 1960 களில் கட்டப்பட்டிருக்கிறது.
அரச குடும்பத்தாரின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்த வீடு, மரங்கள் அடர்ந்த பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. கீழே இரண்டு படுக்கையறையும், மேலே இரு படுக்கைறையையும் கொண்டுள்ள இந்த வீட்டில் ஏராளமான வசதிகள் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தீவில் 150 பேர் வசிக்கின்றனர். இதன் உரிமையாளராக அரசர் இருந்த போதிலும் அவரது நண்பர்களான ராபர்ட் டோரியன்-ஸ்மித் மற்றும் அவரது மனைவி லூசி ஆகியோர் இந்த வீட்டின் பாதுகாவலராக உள்ளனர்.
முன்பதிவு
வைஃபை, ஹை-ஃபை, ஸ்மார்ட் டிவிகள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சமையலறை ஆகியவற்றைக் கொண்ட இந்த காட்டேஜ், நீங்கள் பார்வையிடும் நேரத்தைப் பொறுத்து, ஏழு இரவுகள் தங்குவதற்கு £1,315 முதல் £5,295 வரை விலையில், பொதுமக்களுக்கு முன்பதிவு செய்யக் கிடைக்கிறது.
Also Read | சவூதி அரேபியாவுக்கு அடிச்ச அடுத்த ஜாக்பாட்.. இனி சொர்க்க பூமிதான்.. வெளியான திகைக்க வைக்கும் தகவல்கள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உலகத்தின் Secret- ஆன பதுங்கு குழி.. பார்த்து பார்த்து கட்டிருக்காங்க.. எல்லாமே பக்கா பிளான்.. மிரள வைக்கும் பின்னணி..!
- "என்ன நடந்துச்சுன்னு இந்நேரம் வரை மர்மமாவே இருக்கு".. அடுத்தடுத்து சரிந்த 20 பேர்.. உடனே மூடப்பட்ட தீம்பார்க்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
- "உங்களுக்கு 8 கோடி ரூபாய் ஜாக்பாட் அடிச்சிருக்கு'.. தம்பதிக்கு வந்த மெயில்.. ஏமாத்துறாங்கன்னு நெனச்சவங்களுக்கு காத்திருந்த ஷாக்..!
- "சுத்தி 128 பிளாட்'ல இவரு தான் ஒரே ஆளு.." தனியாக வாழும் முதியவர்.. "இப்போ பேய் நகரம் மாதிரி இருக்காம்.."
- "இது எப்படி இங்க வந்துச்சு".. அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்.. கலர்ஃபுல்லா இருக்கே..!
- "7 வருஷத்துக்கு ஒருதடவை.. அதுவும் ஒரே நாள் தான் அந்த தீவை பார்க்க முடியும்".. அட்லாண்டிக் கடலில் இருக்கும் அமானுஷ்ய தீவு..!
- தீராத பல்வலி... கொஞ்சம் கூட யோசிக்காம பெண் எடுத்த முடிவு.. இருந்தாலும் இது ஓவருங்க.. திகைத்துப்போன நெட்டிசன்கள்..!
- "ஆத்தாடி, மொத்தமா ரூ.1593 கோடிக்கும் மேல.." பரிசு வென்ற நபரை தேடும் நிறுவனம்.. "பின்னாடி இவ்ளோ சுவாரஸ்யம் இருக்கா??"
- குளிர் தேசத்தில் வரலாறு காணாத வெயில்.. சாலையில் உருகி ஓடும் தார்.. சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள்.. வைரல் புகைப்படங்கள்..!
- அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்.. "இப்போதைக்கு சரி பண்ண முடியாது".. ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. அதுக்கப்பறம் நடந்ததுதான் வெயிட்டே.. வைரல் புகைப்படங்கள்..!