வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் 'புத்தாண்டு' உரை.. உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள 3 முக்கிய தீர்மானங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியா: 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு உரையில் வடகொரிய அதிபர் தன் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உணவுப் பற்றாக்குறையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

உலகெங்கும் இன்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டு உரை கவனம் ஈர்த்துள்ளது. வடகொரியா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ராணுவம் தான். வடகொரியாவின் பட்ஜெட்டில் நான்கில் மூன்று பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கப்படும். இதனாலேயே மக்களுக்கு பல பொருளாதார பிரச்சனைகள் இருக்கும்.

கடும் நெருக்கடி:

அதோடு, இந்த பெருந்தொற்று காரணமாக வட கொரியா தனக்குத் தானே கடுமையான கெடுபிடிகளை விதித்து மற்ற நாடுகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் வடகொரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

உணவுப்பஞ்சம்:

தற்போது இறக்குமதி குறைந்துள்ள நிலையில் வட கொரியா கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை தாங்களே விளைவித்துக் கொள்ளுமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியா தற்காப்புக்காக எல்லைகளை மூடியதால் இன்னும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

புத்தாண்டு உரை:

இந்நிலையில் இன்று அதிபர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டு உரையை வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான கேஎன்சிஏ வெளியிட்டுள்ளது.

அதில், 'இந்த புத்தாண்டில் வட கொரியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உணவுப் பற்றாக்குறையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிபர் கிம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கவன ஈர்ப்பு:

வழக்கமாக அதிபர் கிம்மின் புத்தாண்டு உரையில் ராணுவ மேம்பாடு பற்றியே தகவல் வெளியாகும். ஆனால் இம்முறை மக்கள் நலன் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

என்னதான் மக்களை குறித்து பேசினாலும் ராணுவத்தைப் பலப்படுத்துதல் பற்றி கிம் பேசாமல் இல்லை. கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாகவே வட கொரியா தனது ராணுவத்தை பலப்படுத்த வேண்டியுள்ளது எனவும் கூறியிருந்தாராம்.

KIM, FOOD SHORTAGES, NORTH KOREA, கிம் ஜோங் உன், வடகொரியா, KIM JONG UN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்