'வாமா வா, வந்து களத்துல இறங்கு'...'புதிய சக்தியாக மாறும் கிம் ஜாங் உன்னின் சகோதரி'... இனிமேல் ஆட்டம் உக்ரமா இருக்குமே!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரிய அதிபர் எந்த அளவிற்குச் சக்திவாய்ந்த தலைவரோ அந்த அளவிற்கு அவரின் சகோதரி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.

வடகொரியா நாட்டின் அதிபராக இருந்து வரும் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங். தனது சகோதரனின் முக்கிய ஆலோசகராக இருந்து வருகிறார்.  கிம் யோ ஜாங் வட கொரியா நாட்டின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மிகுந்த நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் வடகொரிய ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பிலும் கிம் யோ ஜாங் இருந்து வருகிறார்.

இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் கோ ஜாங்க்கு  தற்போது மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர்  கிம் ஜாங் உன்  பிரதான ஆலோசகராக அறியப்பட்ட கிம் கோ ஜாங்  அந்நாட்டு அரசை வழிநடத்தும் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் இடம் பெற்றிருக்கும் இளம் வயது மற்றும் ஒரே பெண் கிம் கோ ஜாங் மட்டுமே.

வடகொரியாவின் மாநில விவகார ஆணையம் என்பது நாட்டை ஆளுகின்ற முக்கியமான ஒரு குழுவாகும். அண்மையில் இந்த குழுவிலிருந்து சிலர் வயதின் காரணமாக ஓய்வுபெற்றனர். சிலர் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த குழுவில் ஒருவராக கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாகச் சர்வதேச அரசியல் விவகாரங்களைக் கவனித்து வருவோர் தெரிவித்துள்ளார்கள்.

கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அறியப்படுபவர் கிம் யோ ஜாங். வட கொரியாவின் அடுத்த அதிபர் அவர் தான் என்ற அளவிற்குப் பேச்சு அடிபட்டது. இந்த சூழ்நிலையில் கிம் யோ ஜாங்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கிய பொறுப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்