'என்னதான் நடக்குது உங்க நாட்டுல'... 'இத கேக்கும்போதே நெஞ்சு பதறுதே'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'... பெரும் ஆபத்தில் வடகொரியா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது.

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன், சமீபத்தில் காணப்பட அரசு நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டத்தின் போது, மிகவும் எடை குறைந்து காணப்பட்டார். இதற்கு முக்கிய காரணம், கிம் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தன்னுடைய அதிபர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இருப்பினும் வடகொரியாவில் நடப்பது எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவருவது இல்லை. இதனால் அவர் உண்மையில் பதவி விலகுகிறாரா அல்லது அது வெறும் வதந்தி தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் தென் கொரியாவின் உளவு நிறுவனத் தலைவர் கிம் யுங் கீ கூறுகையில், ''கிம் ஜாங் உன் பத்திலிருந்து இருபது கிலோவரை எடை குறைந்து உள்ளார். அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பெரிய நோய் எதுவும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்கக் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. அது தற்போது மேலும் உச்சத்தை அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மையில் வடகொரியாவில் என்ன தான் நடக்கிறது, அங்குள்ள மக்களின் நிலை என்ன என்பதை வடகொரியா உலக நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் உலக நாடுகளின் உதவி கிடைக்கும். உங்களின் சுய லாபத்திற்காக மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். முன்னதாக இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதத்தில் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே உள்ள வர்த்தகம் 81 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்