"பூக்கள் ஏன் மலரவில்லை?".. தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை உத்தரவு போட்டாரா வடகொரிய அதிபர்..? கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கு..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூக்கள் பூக்கவில்லை என்று கூறி தோட்ட பராமரிப்பாளர்களை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.

Advertising
>
Advertising

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

இன்றைய சூழலில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த 12 ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் தான் இருக்கின்றன.  இங்கு நடைமுறைப்படுத்தப்படும் விதிகள் கொடூரமானவை என்றே கூறப்படுகிறது. அண்மையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்த விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தந்தை கணவருக்கு தண்டனை

ஏவுகணை சோதனைக்கு பெயர் பெற்ற  கிம் ஜாங் உன், சர்வாதிகாரத்திற்கும் பெயர் பெற்றவர் ஆக திகழ்கிறார். அமெரிக்காவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு நடத்தியது, தென் கொரியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டது ஆகியவற்றிலும் ஈடுபட்டார். சகோதரியின் கணவரை பதவி நீக்கம் செய்தது, மரண தண்டனையை நிறைவேற்றியது ஆகியவற்றில், கருணையற்றவராக நடந்து கொண்டார். இந்நிலையில், தோட்டத்தில் பூக்கள் பூக்காததற்கு தோட்ட பராமரிப்பாளர்களை தொழிலாளர் முகாம்களுக்கு அழைத்து சென்று தண்டித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடும் தண்டனை

கடந்த ஆண்டு டிசம்பரில் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங்கின் நினைவு நாளை முன்னிட்டு 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மக்கள் சிரிக்கவோ, மது அருந்தவோ, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கவோ தடை விதிக்கப்பட்டது. கிம் ஜாங் உன், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை, ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடுவார்.  இதற்காகவே சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆன இன்று கிம் ஜாங்-இல்லின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

தந்தை பிறந்த தினம்

இன்றைய தினம், வட கொரியாவின் முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி.  இந்நிலையில், தனது தந்தையின் பிறந்தநாளுக்கான பூக்கள், அதுவும் அவர் பெயரிலேயே அறியப்படும் பூக்கள் குறிப்பிட்ட நாளில் பூக்கவில்லை என கிம் ஜாங் உன் இடம் தெரிவிக்கப்பட்டது.  இதில் கோபமடைந்துள்ள கிம் ஜாங் உன், தோட்டக்காரர்கள் குழு ஒன்றை அதிரடியாக சிறை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்சூ மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான ஹான் என்பவரே தோட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தற்போது 6 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1988ல் வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஜப்பானிய தோட்டக்கலை நிபுணர் ஒருவரால் கலப்பின முறையில் புதிதாக உருவாக்கப்பட்ட பூ தான் கிம்ஜோங்கிலியாஸ். இந்த பூ தற்போது மலரவில்லை என்பதால் ஹான் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்

KIM JONG-UN, NORTH KOREAN, KIM JONG-IL, FLOWERS, GARDEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்