“நாட்டுக்குள் ஒருத்தருக்கும் கொரோனா இல்லனு சொல்லிட்டு திரிஞ்சாரே!”.. ‘மனுசன்’ இவ்ளோ வேலை பண்றாரா?.. வழக்கம் போல் வெளியான ‘வடகொரியாவின்’ அதிர்ச்சி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா ஏற்படவில்லை என, அதிபர் கிம் ஜாங் உன், உறுதிபட கூறிவரும் நிலையில், உலக சுகாதார மையமும் இதையே தெரிவித்துள்ளது.

இதனிடையே வடகொரியாவில் கொரோனா நோயாளிகளுக்கு இரகசிய முகாம்கள் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் நோயாளிகள் கொடுமைப் படுத்தப்படுவதாகவும், உணவின்றி அவதிப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த முகாம்கள் அனைத்தும் சீன எல்லையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி, அவர்களின் மொத்த குடும்பமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய முறைப்படியான சிகிச்சையே வழங்கப்படுவதாகவும், எனினும் அது கொரோனாவுக்கான சிகிச்சை தானா என சந்தேகம் எழுவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள், தத்தம் குடியிருப்புகளில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிகிறது. முன்னதாக வடகொரிய தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில், நாட்டு மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் கொரோனாவை பாதுகாக்க ஒத்துழைப்பு கொடுத்த நன்றி கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்