இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே, அடேங்கப்பா..ஹாலிவுட் படம் போல் ஏவுகணை சோதனை நடத்தி மாஸ் காட்டும் வடகொரிய அதிபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது வடகொரிய ராணுவம்.
வட கொரியா..
கிழக்கு ஆசிய கண்டத்தில் தென் கொரியாவுக்கு வடக்கே அமைந்துள்ள நாடு வட கொரியா. 1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டிலிருந்து கொரியா நாடு சுதந்திரம் பெற்றது. அதன் பின் 1948 ஆம் ஆண்டு தென் கொரியா, வட கொரியா என இரு நாடுகளாக பிரிந்தது.
வட கொரிய அரசியல்..
வட கொரியாவை பொருத்தவரை அங்கே கொரிய தொழிலாளர் கட்சி என்ற ஒரே ஒரு அரசியல் கட்சி தான் உள்ளது. வட கொரியா பிரிந்த பின் கிம் II சங்க் என்பவர் ஆட்சியில் இருந்தார். அதற்கு பின்பு 1994 ஆம் ஆண்டு அவரது மகன் கிம் ஜாங் இல் ஆட்சிக்கு வந்தார். அதற்கு பிறகு 2011 ஆம் ஆண்டு கிம் ஜாங் இல்-ன் மகன் கிம் ஜாங் அன் ஆட்சிக்கு வந்து தற்போதும் நிலைத்துக்கொண்டிருக்கிறார்.
வட கொரிய உணவு பஞ்சம்..
உலகெங்கும் கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொருளாதார சீர்குலைவால் வட கொரியா பெரும் உணவு பஞ்சத்தை சந்தித்தது. “குழந்தைகள் கடும் பட்டினியோடு தெருக்களில் இறந்து கிடந்தனர்” என சர்வதேச பத்திரிக்கைகளில் எல்லாம் செய்திகள் வெளிவந்தன.
வட கொரிய ஏவுகணை சோதனை..
2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடாக வட கொரியா இருக்கும் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் அறிவித்து வந்தார். இதனிடையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து வட கொரியா கடந்த ஆண்டு மட்டுமே 7 முறை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது சர்வதேச நாடுகளில் பெரிதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஜப்பான், அமெரிக்கா, போன்ற நாடுகள் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக ஐநா சபை விதித்த தடைகளையும் வட கொரியா மீறியது.
ஹவாசோங் 17..
ஹவாசோங் 17 என்று பெயரிடப்பட்ட ஏவுகணையை கடந்த 24 ஆம் தேதி வட கொரியா சோதனை செய்தது. மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணை என இது கூறப்படுகிறது. மேலும் இது அமெரிக்க வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையை ஹாலிவுட் திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வட கொரிய ராணுவம் வெளியிட்டுள்ளது. இதில் கிம் ஜாங் அன் கருப்பு கண்ணாடி போட்டு ஸ்டைலாக நடந்துவர, ஏவுகணை பின்னால் வர, கிம் கவுண்டவுன் சொல்ல, ஏவுகணை விண்ணில் செலுத்தப்படுகிறது. பின்பு வீரர்களுடன் கிம் சிரித்துக் கொண்டே நடந்து வருகிறார். தற்போது இந்த வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மாமாவுக்கு மரண தண்டனை வழங்கிய கிம்.. 9 வருஷம் கழிச்சு பொதுவெளிக்கு வந்த அத்தை.. என்ன தப்பு பண்ணினார் தெரியுமா?
- எப்பவும் மாட்டுக்கறி தான் சாப்பாடு.. இது நடுவுல, ஜாலியா படம் பாத்து ரசிச்சு இருக்காராம்.. வடகொரியா அதிபர் குறித்த புதிய தகவல்
- வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் 'புத்தாண்டு' உரை.. உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள 3 முக்கிய தீர்மானங்கள்!
- ஐயோ, அவரா இது...? 'எப்படி' இருந்த மனுஷன்...? ஆள் 'அடையாளம்' தெரியாத அளவுக்கு 'சேஞ்ச்' ஆன வடகொரிய அதிபர்...! ஏன் இப்படி ஆயிட்டாரு...? - வைரல் ஃபோட்டோ...!
- ப்ளீஸ், கொஞ்சம் 'கம்மியா' சாப்பிடுங்க...! 'அதிகமா சாப்பிட்டா நிலைமை கைமீறி போயிடும்...' 'சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்...' - குண்டை தூக்கி போட்ட கிம்...!
- இப்போ நாம 'பண்ண' போற விஷயம்... 'மத்த நாடுகளுக்கு ஈரக்குலைய நடுங்க வைக்கும்...' 'கிம் போட்ட அடுத்த ஸ்கெட்ச்...' - இனிமேல் மனசுல கூட 'அப்படி' நினைச்சு பார்க்க கூடாது...!
- 'வாமா வா, வந்து களத்துல இறங்கு'...'புதிய சக்தியாக மாறும் கிம் ஜாங் உன்னின் சகோதரி'... இனிமேல் ஆட்டம் உக்ரமா இருக்குமே!
- 'வட கொரிய அதிபரின் சகோதரி எடுத்த அதிரடி முடிவு'... 'நான் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுவேன்'... அனல் பறக்கும் பின்னணி!
- கிம்-ஐ 'ஒத்த வார்த்தையால' கேவலமாக திட்டிய 'முன்னாள்' அதிபர்...! 'நேர்ல பாக்குறப்போ நல்ல சிரிச்சு பேசிட்டு...' - அங்க போய் 'என்ன' பண்ணியிருக்கார் பாருங்க...!
- 'என் கண்ணையே நம்ப முடியல'... 'சத்தியமா சொல்லு அவர் தானா'?... 'அதிர்ச்சியிலிருந்து மீளாத உலக நாடுகள்'... 'இணையத்தை கலங்கடித்த புகைப்படங்கள்!