தன்னுடைய குருவின் இறுதி ஊர்வலத்துல கலந்துக்கிட்ட கிம் ஜாங் உன்..வட கொரியாவின் சூப்பர் ஹீரோவாக கருதப்படும் ஹியோன் சோல் ஹே.. யாருப்பா இவரு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் தலைமை ராணுவ அதிகாரி ஒருவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது பற்றித்தான் உலகமே பரபரப்புடன் பேசிவருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "சின்ன ஆசை தான்.. ஆனா ரொம்ப நாள் இதுக்காக ஏங்கிருக்கேன்".. அப்பா, அம்மாவுக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்.. கண்கலங்கிய நெட்டிசன்கள்..!

கிம் ஜாங் உன்

வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன், பொதுவாக வெளி உலகிற்கு அரிதாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்வார். உச்சகட்ட பரபரப்பான சூழ்நிலை, ஆயுத பரிசோதனை என அவர் மீடியா முன்பு தோன்றும் நிகழ்ச்சிகள் மிகக்குறைவுதான். அதிலும், முக்கிய தலைவர்கள் இறந்தால் கூட ஒருத்தி ஊர்வலத்துக்கு வராத கிம் ஜாங் உன் கடந்த 19 ஆம் தேதி காலமான ஹியோன் சோல் ஹே-வின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

ஹியோன் சோல் ஹே

கொரிய யுத்தம் நடைபெற்ற வேளையில், கிம் II சங்-கிற்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஹியோன் சோல் ஹே. வட கொரியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படும் கிம் II சங்-ன் நெருக்கமான அதிகாரியாக வலம்வந்த ஹியோன், பின்னாளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

கிம் II சங்-ன் மரணத்துக்கு பிறகு அவரது மகன் கிம் ஜாங் இல் வட கொரியாவின் அதிபராக பதவியற்றார். அப்போதும் அதிபரின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை கண்காணித்துவந்தார் ஹியோன். ராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துவந்த ஹியோன், வட கொரியாவின் அதிபராக இருந்த கிம் ஜாங் இல் மரணமடைந்த பிறகு தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன்-ற்கு குருவாக செயல்பட்டவர்.

குரு

அரசியல் விவகாரம், உலக நாடுகளுக்கு இடையேயான உறவு, ஆட்சி அதிகாரம் போன்றவற்றை ஹியோனிடமிருந்தே கிம் ஜாங் உன் கற்றுத் தேர்ந்தார். அதிபர் பொறுப்புக்காக கிம் ஜாங் உன்னை பயிற்றுவித்த ஹியோன், வட கொரியாவின் முக்கிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு காரணமாக அமைந்தவர். இதன் காரணமாகவே அவரை சூப்பர் ஹீரோவாக கருதுகின்றனர் அம்மக்கள்.

தனது தாத்தாவிடம் துவங்கி, தன்னுடைய ஆட்சி காலம் வரை நாட்டிற்காக உழைத்த ஹியோன் சோல் ஹே-வின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கிம் ஜாங் உன், அவருடைய உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தூக்கிச்சென்றது பலரையும் கலங்க வைத்தது.

தனது தந்தையின் இறுதி ஊர்வலத்திற்கு பிறகு கிம் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் ஹியோன் சோல் ஹே-உடையது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | 2 நாளா அப்பா போனை எடுக்கல.. போலீஸுடன் வீட்டுக்கு வந்த மகள்..கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

KIM JONG UN, MENTOR, HYON CHOL HAE, HYON CHOL HAE FUNERAL, கிம் ஜாங் உன், ஹியோன் சோல் ஹே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்