‘எதிர்பாராம நடந்திருச்சி மன்னிச்சிருங்க’.. அரிதிலும் அரிது.. மன்னிப்பு கேட்ட ‘வடகொரிய’ அதிபர்.. காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரியக் கடற்பகுதியில் தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. இரு நாடுகளுக்கிடையே தீராப்பகை நிலவி வருகிறது. கடந்த ஜீன் மாதம் வடகொரிய தலைமைக்கு எதிராக கடுமையாக விமர்சித்து துண்டு பிரசுரங்கள் நிரப்பப்பட்ட பலூன்களை வடகொரியாவுக்குள் தென்கொரியா அனுப்பியது.
இந்த நிலையில் வடகொரியா எல்லைக்கு 10 கிமீ தொலைவில் யியோன்பியோங் (Yeonpyeong) தீவுக்கு அருகே 47 வயதான தென்கொரியாவை சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி கடந்த திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவர் மாயமானார். இதனை அடுத்து அந்த படகில் இருந்து அவரது ஷீக்களை விட்டு சென்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வடகொரியாவுக்குள் ஊடுருவ முயன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த செவ்வாய்கிழமை அவரை வடகொரிய துருப்புகள் விசாரணை நடத்தி கடற்பகுதியில் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் அவரது உடலை எண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதனை தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த செயலால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை அடுத்து இதற்கு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் தென்கொரிய வீரர் கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அதில்,‘தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் உடல் கடலில் எரிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு வடகொரியா அதிபர் கிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது எதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்’ என தென்கொரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகொரிய அதிபர் மன்னிப்பு கேட்பது என்பது அரிதான செயல் என சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு'... 'ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் உன் பகிர்ந்த 'பகீர்' தகவல்!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் ரகசியம்'...
- 'P.HD முடிச்சிட்டு டாக்டரா வருவான்னு தானே இருந்தோம்'... 'மொத்த கனவையும் நொறுக்கிய காது வலி'... ஏர்போர்ட்டில் நடந்த துயரம்!
- கோமாவில் 'கிம் ஜாங் உன்'??.. அதிபராகும் 'தங்கை'..??,, பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில்,,... நெட்டிசன்கள் 'கூகுள்' பண்ணது இத தான்,,.. அதிர்ச்சி தரும் 'ரிப்போர்ட்'!!!
- 'நீண்டநாள் அமைதிக்குப் பிறகு'... 'அச்சத்தை கிளப்பியுள்ள நாடு!'... 'திடீரென கடுமையாகும் நடவடிக்கைகளால் வலுக்கும் சந்தேகம்'...
- "இனிமே போருக்கு எல்லாம் போகமாட்டோம்னு சொன்னீங்க"... இப்போ என்னடான்னு பாத்தா... 'வடகொரியா' குறித்து 'ஐ.நா' வெளியிட்ட அதிர்ச்சி 'தகவல்'!!
- 'அப்போ இவரு சீன அதிபர் இல்லையா'... 'கன்பியூஸ் ஆன பாஜகவினர்'... 'மாற்றி எரிக்கப்பட்ட உருவபொம்மை'... வைரலாகும் வீடியோ!
- எங்க 'ஓட' பாக்குறீங்க?... 'எல்லையில்' சிக்கிய 'தம்பதி'... 'வடகொரிய' அதிகாரிகளின் 'கொடூர' செயல்!
- 'வடகொரியாவில்' நடக்கும் விரும்பத்தகாத 'விஷயங்கள்...' 'அதிகரிக்கும் சந்தேகம்...' "கிம்மின் நிலை என்ன?" "அடுத்து அங்கு நடக்கப் போவது என்ன?..."
- 'பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் ஜாங் உன்...' 'யூகங்களுக்கு முற்றுப்புள்ளி...' 'புகைப்படத்துடன் வெளியான செய்தி...'
- 127 கிலோ 'வெயிட்'... சீனா 'சூப்னா' கொள்ளை இஷ்டம்... வடகொரிய அதிபர் குறித்து வெளியான 'புதிய' ரகசியங்கள்!