அமெரிக்க வரலாற்றுலயே இதான் முதல்முறை.. கொண்டாடப்படும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்.. யார் இவர்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக கறுப்பின பெண் ஒருவர் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இதனை பலரும் வரவேற்று வருகின்றனர்.

Advertising
>
Advertising

"இன்னும் சில நாள்ல ஹாஸ்பிடல்-ல இருக்க பேஷண்ட் எல்லாம்".. இலங்கை மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்க உச்ச நீதிமன்றம்

புகழ்பெற்ற அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்னும் கறுப்பின பெண்மணியை நியமிக்க அமெரிக்க செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கமலா ஹாரிஸ் தலைமையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 53 - 47 என்ற வித்தியாசத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றிருக்கிறார் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன். இதன் மூலம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இவர் பதவியேற்பது உறுதியாகி உள்ளது.

தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஸ்டீபன் பிரேயர் இன்னும் சில நாட்களில் ஓய்வுபெற இருக்கிறார். முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டே ஜாக்சனை நீதிபதியாக நியமிக்க அனுமதி அளித்தார். இருப்பினும், ஜனநாயகக் கட்சி ஜாக்சனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துவந்தது. இதனால் வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ஜாக்சன் வெற்றிபெற்று உள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக

51 வயதாகும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் தற்போது வாஷிங்டன் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவருகிறார். இவர் ஹார்வர்ட் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்டப் பட்டமும் பெற்றவர். அதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர், பராக் ஒபாமாவிற்கு ஜாக்சன் நெருங்கிய நண்பர் ஆவார். இதன் காரணமாக குடியரசு கட்சியின் ஆதரவாளராக இருந்துவந்த ஜாக்சனை கடந்த 2010 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமித்தார் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா.

பாராட்டு

இதன் இடையே, தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஒரு கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கரை நியமிப்பதாக பைடன் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அதேபோல, ஜாக்சனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க அமெரிக்க செனட் சபையும் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கறுப்பினத்தை சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. வாக்கெடுப்பில் வெற்றபெற்றபோது ஜாக்சனுக்கு செனட் உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது அனைவரையும் நெகிழ வைத்தது.

ரஷ்யாவுக்கு புதிய நெருக்கடி?.. 11 வருஷத்துக்கு அப்புறம் ஐநா வைத்த செக்.. ஆட்டம் சூடுபிடிக்குது!

KETANJI BROWN JACKSON, FIRST BLACK WOMEN, US SUPREME COURT, USA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்