கொரோனா காலத்தில் தோன்றிய ஐடியா.. குடும்பத்துக்காக சொந்த விமானம் உருவாக்கிய கேரள வாலிபர்.. சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நம்மில்,பலருக்கும், ஊர் ஊராக போய், பயணங்கள் மேற்கொண்டு நிறைய இடங்களை கண்டு களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

Advertising
>
Advertising

அதே போல, விமானம் மூலம் பல நாடுகளுக்கு சென்று, ஏராளமான நாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என பலருக்கும் விருப்பம் இருக்கும்.

அதிலும் குறிப்பாக, விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற அலாதி பிரியமும் சிலருக்கு உள்ளது. அதே வேளையில், ஒரு முறையாவது விமானத்தில் ஏறி எங்காவது சென்று விடும் என்பது பலரின் கனவாக உள்ளது.

ஆனால், அதே வேளையில் சொந்தமாக விமானம் ஒன்று உருவாக்கி, அதன் மூலம் வேறு நாடுகளுக்கு பயணம் கொண்டு அசத்தி உள்ளார் கேரள வாலிபர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் அலிசெரில். இவர் நான்கு பேர் அமரக்கூடிய விமானம் ஒன்றை சொந்தமாக உருவாக்கி அசத்திக் காட்டியுள்ளார். கேரள முன்னாள் எம்எல்ஏ தாமராக்ஷன் மகனான அசோக், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பைலட் லைசன்ஸ் எடுத்த அசோக், இரண்டு பேர் அமரக் கூடிய விமானத்தை வாடகைக்கு எடுத்து வெளியூர் பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், குடும்பம் பெரிதானதால், நான்கு பேர் அமரக் கூடிய விமானம் ஒன்றை சொந்தமாக உருவாக்கவும் திட்டம் ஒன்றை போட்டுள்ளார் அசோக்.

கொரோனா தொற்று இந்தியாவில் உருவாக ஆரம்பித்த சமயத்தில், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தையும் இதற்காக அசோக் சேமிக்க தொடங்கியுள்ளார். முதல் லாக்டவுனில் பணத்தை சேர்க்க ஆரம்பித்த அசோக், சில மாதங்களிலேயே தனக்கு தேவையான பணத்தையும் சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 18 மாதங்களில், 1500 மணி நேரம் செலவு செய்த அசோக், இந்திய மதிப்பில் சுமார் 1.4 கோடி ரூபாய் செலவு செய்து சொந்த விமானத்தையும் உருவாக்கியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் பல ஐரோப்பா நாடுகளுக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றும் வந்துள்ளார் அசோக். வீட்டில் உருவாக்கப்படும் விமானங்களுக்கு ஐரோப்பா மற்றும் US உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சனை ஒன்றுமில்லை என்றும், இந்தியாவிலும் இது போன்று வீட்டில் உருவாக்கப்படும் விமானங்களுக்கு சாதகமாக சட்டங்கள் இயற்றப்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அசோக் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், லண்டனில் சொந்தமாக விமானம் தயாரித்த செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

AIRCRAFT, ASHOK ALISERIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்