'சத்தியமா நம்பவே முடியலைங்க...' இது என்ன கனவா...?! 'லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவில் வந்த தகவல்...' - ஓவர்நைட்ல கோடிஸ்வரர்கள் ஆயிட்டாங்க...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 26 வயது சரத் குன்னுமல் என்னும் இளைஞர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.

சரத் தன் நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து துபாய் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது அந்த லாட்டரி குலுக்கல் முடிவு வெளியாகியுள்ள நிலையில் முதல் பரிசாக 10 லட்சம் டாலரானது சரத் மற்றும் அவரது நண்பர்கள் வாங்கிய எண்ணில் விழுந்துள்ளது.

அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 7 கோடி எனவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரிசு பெற்ற சரத் குன்னுமல் கூறும்போது, 'நாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு பரிசு தொகை விழும் என நினைக்கவில்லை. நடந்தது கனவு போல் உள்ளது. அதுவும் இப்போது முதல் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசை எனது நண்பர்கள் 9 பேருடன் பகிர்ந்து கொள்வேன்.

மேலும் என் வயதான பெற்றோரின் மருத்துவ செலவுகளுக்காகவும் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்வேன்' எனக் கூறியுள்ளார் சரத்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்