"அம்மா நான் ஆஸ்கர் வாங்கிட்டேன்".. அகதி முகாம் TO ஆஸ்கர் மேடை.. கண்ணீருடன் பேசிய நடிகர் கீ ஹுங் குவான்.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற கீ ஹுங் குவான் மேடையில் கண்ணீருடன் பேசிய வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்கர் 2023

சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

7 ஆஸ்கர் விருதுகள்

டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான படம் “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”. டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இருவரும் இந்த படத்தை இயக்கி இருந்தனர். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 விருதுகளை வாரி குவித்திருக்கிறது இந்த படம். இதனால் உலக சினிமா ரசிகர்களே பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

கீ ஹுங் குவான்

வியாட்நாம் நாட்டில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தது குவானின் குடும்பம். அகதி முகாமில் ஒரு வருடத்தை கழித்த குவான் என்றாவது ஒருநாள் இந்த உலகமே தன்னை திரும்பிப் பார்க்கும் என கனவுகள் கண்டிருக்கிறார். இன்று அந்த கனவுகள் அவருக்கு கைகூடியிருக்கின்றன. “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார் குவான்.

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்கரை வென்றுவிட்டேன்

விருதை பெற்றுக்கொண்டு பேசிய அவர்,"என்னுடைய அம்மாவுக்கு 84 வயதாகிறது. அவர் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக்கொண்டிருப்பார். அம்மா, நான் ஆஸ்கரை வென்றுவிட்டேன். என்னுடைய பயணம் ஒரு படகில் துவங்கியது. அகதிகள் முகாமில் ஓராண்டை கழித்தேன். இப்போது ஆஸ்கரை வென்றிருக்கிறேன். இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும் என்கிறார்கள். எனது தாய்க்கும் அவரது தியாகங்களுக்கும் எனது காதல் மனைவிக்கும் நன்றி." என கலங்கிய கண்களுடன் பேசினார். இதனை கேட்ட மொத்த கலைஞர்களும் உற்சாக வரவேற்பு அளித்து குவானை பாராட்டினர். இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

OSCAR, KEE HUE QUAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்