இவ்வளவு பெரிய கப்பல்ல இருக்கும் குட்டி அறை.. சுவாரஸ்ய பின்னணியை வெளியிட்ட பெண் ஊழியர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் அதே கப்பலில் உள்ள மிகச்சிறிய அறையில் வசித்து வருகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.
வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, புதிய வீட்டுக்கு செல்வதாக இருந்தாலும் சரி மனிதர்கள் பெரும்பாலும் நன்கு பெரிதான இடங்களையே தெர்ந்தெடுக்கின்றனர். இடப்புழக்கம் அதிகம் வேண்டும் என்ற எண்ணம் பலரிடத்தில் இருந்தாலும் சமீப காலத்தில் இந்த சிந்தனை மாற்றம் கண்டிருக்கிறது. காம்பாக்ட் ஹவுஸ் எனும் சிறிய வீடுகள் நோக்கி மக்கள் நகர துவங்கியுள்ளனர். ஒரே அறையை பல பகுதிகளாக பிரித்து கியூட்டாக தங்களுக்கு தகுந்தபடி வடிவமைத்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் கெய்லி டோமினி சிம் என்ற பெண் உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான Royal Caribbean's Wonder of the Seas-ல் பணிபுரிந்து வருகிறார். இந்த கப்பலில் இருக்கும் இவருடைய அறையின் அளவு தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
பிரம்மாண்ட கப்பல்
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது Royal Caribbean's Wonder of the Seas. உள்ளே விளையாட்டு பகுதி, தீம் பார்க், ஹை டெக் உணவகங்கள் என பூலோக சொர்க்கம் போல இருக்கும் இக்கப்பலில் பணிபுரிந்து வருகிறார் கெய்லி டோமினி சிம். இங்கு அவரது அறையை மிகவும் சிறியதாக இவரே வடிவமைத்திருக்கிறார். இவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து சிறிய அறையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இந்த அறையில் தனது தோழியுடன் தங்கியுள்ளார் கெய்லி. இதற்குள் சிறிய குளியலறை ஒன்றும் இருக்கிறது. அதற்குள்ளேயே கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் இரண்டு அடுக்கு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலை துணிகளைக்கொண்டு நுழைவு பகுதியையையும் சிறியதாக மாற்றியுள்ளார் கெய்லி.
காரணம் என்ன?
கெய்லி இந்த கப்பலில் ஆகஸ்டு மாதம் வரையில் பணிபுரிய இருக்கிறார். அதுவரையில் இந்த அறையில் தான் தங்க இருப்பதாக கூறுகிறார் இவர். தன்னுடைய பொருட்களை மேஜைக்கு அடியே வைத்துக்கொள்ளும் இவர், இப்படியான இடம் தான் தனக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். மேலும், ஒவ்வொரு தேவைகளுக்கும் தனித்தனியாக செல்ல தனக்கு விருப்பமில்லை எனவும் அதனால் தான் இருக்கும் இடத்துக்கே அனைத்தையும் கொண்டுவந்துவிட்டதாக கூறுகிறார்.
தன்னுடைய கடல் பயண வீடியோக்களை கெய்லி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் ஏராளமான மக்கள் இவரை சமூக வலை தளங்கள் வாயிலாக பின்தொடர்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சுமார் 300 வருஷத்துக்கு முன்னாடியே கடலில் மூழ்கிய அரசரின் கப்பல்.. உள்ள இருந்த பொக்கிஷத்தை கண்டுபிடிச்சும் வெளில சொல்ல முடியாம தவிக்கும் சகோதரர்கள்..!
- "அந்த கடலுக்கு கீழ 710 கப்பல்கள் இன்னும் இருக்கு".. அதிபருக்கு கிடைச்ச தகவல்..அது மட்டும் கிடைச்சுட்டா இனி உலகத்தின் பணக்கார நாடு இதுதான்..!
- "கப்பல்ல ஏறின ஒரு பெண்ணை காணோம்"..கேப்டனுக்கு பறந்த தகவல்.. நடுக்கடல்ல நிறுத்தப்பட்ட சொகுசு கப்பல்.. ஆபிசர்கள் சொல்லிய ஷாக் நியூஸ்..!
- 100 வருஷத்துக்கு முன்னாடி மூழ்கிப்போன கப்பலில் இருக்கும் பொக்கிஷம்.. கப்பலை நெருங்கவிடாத கடல் மான்ஸ்டர்? கடைசியா உள்ள இருந்ததை கண்டுபிடிச்ச நபர்..!
- உலகின் மர்மமான இடமான பெர்முடா முக்கோணத்துக்கு பயணிக்க இருக்கும் சொகுசு கப்பல்.. பயணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள டேஞ்சரான ஆஃபர்..!
- டைட்டானிக்-கு முன்னாடியே கடல்ல மூழ்குன கப்பல்.. அச்சு பிசறாம இன்னும் அப்படியே இருக்கு.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!
- நமக்கு இருக்குற 'ஒரே வழி' அது தான்...! 'அதுல' மட்டும் தான் 'செக்' பண்ண மாட்டாங்க...! கப்பலுக்குள்ள 'ட்ரக்ஸ்' கொண்டு போனது எப்படி...? - வெளிவந்துள்ள 'அதிர' வைக்கும் உண்மைகள்...!
- 'கேப்டன் சூயஸ் கால்வாய் வர போகுது'... 'மீண்டும் இதயத்துடிப்பை எகிற வைத்த 'எவர் கிவன்' கப்பல்'... பரபரப்பு சம்பவம்!
- 'ஹைஜேக்' செய்யப்பட்டதா 'எண்ணெய்' கப்பல்...? 'கொஞ்ச நேரத்துலையே நடந்த டிவிஸ்ட்...' 'குழப்பத்துக்கு மேல் குழப்பம்...' - என்ன தான் நடந்துச்சு...?
- VIDEO: நடுக்கடலில் குபுகுபுவென பற்றி எரிந்த கப்பல்!.. தீயை அணைப்பதற்குள் அடுத்த விபரீதம்!.. இலங்கையில் பயங்கரம்