'எல்லா குடும்பத்திலும் இருக்குற பிரச்சனை'... 'அண்ணன், தம்பியை வைத்து அண்ணியார் போட்ட பிளான்'... தாத்தாவின் இறுதி சடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணம் உலகம் முழுவதும் அவர் குறித்த நினைவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

'எல்லா குடும்பத்திலும் இருக்குற பிரச்சனை'... 'அண்ணன், தம்பியை வைத்து அண்ணியார் போட்ட பிளான்'... தாத்தாவின் இறுதி சடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கு எப்போதும் தனி மரியாதையும், அன்பும் உண்டு. அரச குடும்பம் குறித்து நல்ல செய்தியோ அல்லது ஏதாவது சர்ச்சையான செய்திகளோ வந்தாலும் அது அந்நாட்டு மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சமீபத்தில் மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணம் அந்நாட்டு மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. அதோடு மக்கள் மனதில் இன்னொரு பெரிய கேள்வியும் எழுந்தது.

அது, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போதாவது, மேகனால் பிரிந்த ராஜ குடும்பம் மீண்டும் இணையுமா, இத்தனை காலம் இணைந்து நடந்த சகோதரர்கள் வில்லியமும் ஹரியும், தங்கள் தாத்தாவின் இறுதிச்சடங்கின்போதாவது மீண்டும் சேர்ந்து நடப்பார்களா என்பது தான். சகோதரர்கள் இருவரின் அன்பும் பாசமும், இங்கிலாந்து மக்களை மிகவும் கவர்ந்த ஒன்று.

Kate Middleton Plays Peacemaker for Brothers William, Harry

இதனால் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என எத்தனை நெஞ்சங்கள் வேண்டிக் கொண்டார்களோ தெரியவில்லை, தற்போது அவர்களின் வேண்டுதலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆம், சகோதரர்கள் வில்லியமும் ஹரியும் மட்டுமல்ல, கூடவே ஹரியின் அன்பு அண்ணியும், வில்லியமுடைய மனைவியுமான கேட்டும் இணைந்து, மீண்டும் அதே மூவர் அணியாக நடைபோட்ட ஒரு பொக்கிஷ தருணம் வீடியோவாக பதிவாகியுள்ளது. வழக்கமாக அரச குடும்பத்தினர் காரில் மக்களைப் பார்த்து கையை அசைத்து விட்டு செல்வது தான் வழக்கம்.

ஆனால் இம்முறை இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குக்காக கார்களைத் துறந்து, குடும்பமாக இணைந்து, கால் நடையாகவே நடந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இளவரசர் சார்லஸை ஏற்றிச்செல்ல கார் ஒன்று வர, அவர் கார் வேண்டாம் என்று கூறி காரை அனுப்பிவிட்டு நடக்கத் துவங்க, அவருக்குப் பின்னால் மற்றவர்களும் நடக்கத் துவங்கும் காட்சியைக் காணலாம்.

பின்னர் வில்லியம், அவரைத் தொடர்ந்த கேட் ஆகியோர் தங்கள் அன்புச் சகோதரன் ஹரிக்காக ஒரு கணம் தாமதித்து, அவர் வந்ததும் மூவருமாக இணைந்து நடப்பதையும் காணலாம். சகோதரர்கள் இடையே இருந்த மனக்கசப்பு மாறி இருவரும் இணைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது ஹரியின் அண்ணியும், வில்லியமுடைய மனைவியுமான கேட் என கூறப்படுகிறது.

இதற்கிடையே மகாராணியாரின் பிறந்தநாள் நெருங்கும் நிலையில், முதன்முறையாகக் கணவர் இல்லாமல் ஒரு பிறந்தநாளை அவர் சந்திக்கும் நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்