“கமலா ஹாரிஸ் சொன்னதும் கண்ணுல தண்ணியே வந்துருச்சு!”.. ‘மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் ‘கூகுளில்’ தேடிவரும் ‘அந்த’ வைரல் ‘தமிழ்’ வார்த்தை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அரசியலில் முதன்முதலாக ஒரு தமிழ் வார்த்தை உச்சரிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்குக் காரணம், அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுபவரும், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொணடவருமான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆன்லைன் அரசியல் மாநாட்டின்போது பயன்படுத்திய ‘சித்தி’ என்கிற தமிழ் வார்த்தை வைரலானதுதான்.

இதைக் கேட்ட பலரும், “நாம உண்மையிலயே தமிழ் வார்த்தையைதான் கேட்டோமா?”, “முதன் முதலில் அமெரிக வரலாற்றில் துணை அதிபர் பதவி வேட்பாளர் சித்தி எனும் தமிழ் பெயரை உச்சரிப்பது பெருமையாக இருக்கிறது”, “சித்திகள் உரக்கக் கத்துங்கள்”, “கமலா ஹாரிஸ் சித்தினு சொன்னதும் கண்ணுல அழுகையே வந்துருச்சு”, “மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் கூகுள் சித்தி எனும் வார்த்தை பற்றி தேடியதாகத் தெரிகிறது” என்பன போன்ற ட்வீட்களை பதிவேற்றி வருகின்றனர்.

மற்ற செய்திகள்