“ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா பாதுகாப்பா இருக்காது! ஆனா இந்த கமலா ஹாரிஸ்”.. ‘பிரச்சாரத்தில்’ டிரம்ப்பின் வைரல் பேச்சு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்றும் அவரைவிடவும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஒரு படி மோசமானவர் என்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

வருகிற நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகவே அதிபர் டிரம்ப் ஜோ பிடனை கடுமையான தொனியில் விமர்சித்து வரும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த பிரச்சார கூட்டமொன்றில் டிரம்ப் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சைக்குள்ளனது.
அதில் ஜோ பிடன் அமெரிக்காவின் அதிபரானால் அமெரிக்க பாதுகாப்பாக இருக்காது என்றும் குறிப்பாக அவரை விடவும் துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இன்னும் ஒருபடி மோசமானவர் என்றும் அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

ஒருவேளை ஜோ பிடன் அதிபராகிவிட்டால் உடனடியாக போலீஸ் துறையை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான சட்ட திட்டங்களை கொண்டு வருவார் என்றும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் அவரை விடவும் தனக்கு இந்திய வம்சாவளியினரின் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய டிரம்ப், ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இருவருமே காவல்துறைக்கு எதிராக செயல்பட்டு அவர்களின் மரியாதையையும் கவுரவத்தையும் பறிப்பவர்கள் என்றும் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்