பாவம் ஆப்கான் மக்கள்...! 'சாப்பிடாம கூட கொஞ்ச நாள் இருக்கலாம்...' தண்ணி குடிக்காம எப்படி...? - 'தண்ணி'யால வந்துருக்க 'அடுத்த' பிரச்சனை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவுடன், அந்நாட்டு மக்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு தப்பித்து செல்கின்றனர். உலக நாடுகளும் அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர தீவிரம் காட்டி வருகிறது.

ஆப்கானில் நிலவி வரும் அசாதாரண சூழலினால் அனைத்து பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தலைநகர் காபூலில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ரூ.3000-க்கும், உணவு ரூ.7400-க்கும் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மக்கள் வாழ்க்கை நடந்த கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காபூலில் உணவு மற்றும் தண்ணீரை வாங்க மக்கள் வரிசைகட்டி நிற்பது காண்போரை கலக்கமடையச் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மோசமான சூழல் காரணமாக மக்கள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பஞ்சத்தில் தவிக்க  வாய்ப்புள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்