“முகத்தின் ஒரு பாதி செயல்படவில்லை…” இப்படி ஒரு பிரச்சனையா? … JUSTIN BIEBER வெளியிட்ட Video

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகப் புகழ்பெற்ற பாடகர் ஜஸ்டின் பெய்பர் தனது உடல்நலப் பிரச்சனை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.

“முகத்தின் ஒரு பாதி செயல்படவில்லை…” இப்படி ஒரு பிரச்சனையா? … JUSTIN BIEBER வெளியிட்ட Video
Advertising
>
Advertising

ஜஸ்டின் பெய்பர்…

மிக இளம் வயதிலேயே தனது உலகப் புகழ் பெற்ற பாடல்கள் மூலம் ரசிகர்களைப் பெற்றவர் கனடிய பாடகட் ஜஸ்டின் பெய்பர். குறிப்பாக பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இவரது பாடலை விரும்பிக் கேட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் பெய்பர், இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதையும் இளம் வயதிலேயே பெற்றுள்ளார் பெற்றுள்ளார்.

Justin bieber says his face partly paralysed fans sad

ராம்சே ஹண்ட்ஸ்…

இந்நிலையில் அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தான் ஒரு உடல்நலப் பிரச்சனைக்கு ஆளாகி இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் ”முகத்தின் பாதியை செயலிழக்கச் செய்யும் ஒரு சிண்ட்ரோம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிண்ட்ரோம் ராம்ஸே ஹண்ட்ஸ் என சொல்லப்படுகிறது. ஒரு வகை வைரஸால் உருவாகும் இந்த பிரச்சனை நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது. நான் எனது அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களை ரத்து செய்துள்ளதால் பலரும் அதிருப்தி அடைந்து இருப்பீர்கள். நீங்களே பார்க்கிறீர்கள். என்னால் இப்போது உடல்ரீதியாக அதை செய்ய முடியாது.” என கூறியுள்ளார்.

ரசிகர்களின் நம்பிக்கை

மேலும்  “எனவே நான் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும்  வரை எனது சுற்றுப்பயணங்களை ஒத்தி வைக்கிறேன். இயல்பு நிலைக்கு வர எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை. உங்கள் அன்பையும் பிராத்தனைகளையும் கொடுங்கள்” என உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர் மீண்டும் குணமாகி வரவேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.

 

JUSTIN BIEBER, RAMSAY HUNT, SYNDROM, VIRAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்